6 வருட வீழ்ச்சியில் மொத்த விலை பணவீக்கம்!! "0 சதவீதம்"

டெல்லி: கடந்த 5 மாதங்களாக நாட்டின் மொத்தை விலை பணவீக்கம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது, தற்போது இதன் அளவு 0 சதவீதத்தை எட்டி 6 வருட விழ்ச்சியை சந்தித்துள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் மற்றும் வர்த்தக பொருட்களின் விலை குறைந்தால் இந்தியாவில் உற்பத்தி செலவுகள் அதிகளவில் குறைந்துள்ளது, இதன் எதிரொலி உணவு பொருட்களிலும் பிரதிபலித்துள்ளது.

உணவு பொருட்கள்

உணவு பொருட்கள்

2013ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 7.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. உலக சந்தையின் வர்த்தக எதிரொலியால் தற்போது தானியங்கள், அரிசி, கோதுமை, காய்கறிகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பால் மற்றும் உருளைகிழக்கு

பால் மற்றும் உருளைகிழக்கு

பிற தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் குறைந்தாலும், பால் மற்றும் உருளைகிழங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் பால் விலை 10 சதவீதமும், உருளையின் விலை 34 சதவீத அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. அதேபோல் அரிசி மற்றும் பருப்பு பொருட்களின் விலை கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது, இதன் மொத்த விலை பணவீக்கம் -4.9 சதவீதமாக உள்ளது. இது 2013ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 11.08 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

பொருளாதார முன்னேற்றம்

பொருளாதார முன்னேற்றம்

கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியின் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு பல நன்மைகள் கிடைத்தாலும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. மேலும் இந்தியாவில் அனைத்து உணவு பொருட்களின் உள்ளீட்டு அளவு குறைந்துள்ளது, இதன் அளவு அதிகரிக்கும் போது கண்டிப்பாக பணவீக்கம் அதிகரிக்கும் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த வீர்மணி தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+