டெல்லி: தொடர் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நீண்ட கால முதலீட்டை ஈர்க்க முடியாத நிலையில் உள்ளது, இந்நிலையில் வங்கி கடனுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும், சன் குரூப் நிறுவனமும் உத்திரவாதம் அளிக்க ஒப்புக்கொண்டது.
ஆயினும் வங்கிகள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிலையை பார்த்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடன் அளிக்க முன்வரவில்லை.

மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முதலீடு செய்யும் அளவிற்கு குழுமத்தில் பணம் இல்லை என்றும், எனவே தான் நிறுவனம் வங்கியை நாடியது என்று சன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.எல் நாரயணன் தெரிவித்தார்.
வங்கிக்கு கடனுக்கு உத்திரவாதம் அளிப்பது தவிற எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் எஸ்.எல் நாரயணன் தெரிவித்தார்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் ஸ்பைஸ்ஜெட்க்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தி விட்டது இதனால் இவ்விமான நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் முடங்கியது.


Click it and Unblock the Notifications