மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் புதன்கிழமை நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியது. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 700 மில்லியன் டாலரை நிதியை திரட்டியது.
இந்நிறுவன முதலீட்டில் புதிதாக கத்தார் முதலீட்டு ஆணையம் இணைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு மட்டும் 11 பில்லியன் டாலராகும். வெகு நாட்களாக மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா இ-காமர்ஸ் சந்தையில் வளர்ச்சியில் கண் வைத்திருந்தது. மேலும் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளது கத்தார் முதலீட்டு ஆணையம்.
150 மில்லியன் டாலர்
இந்தியாவில் இத்துறையில் வேகமான வளர்ச்சி கத்தார் முதலீட்டு ஆணையத்தை பிளிப்கார்ட் நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வைத்துள்ளது.
பிற முதலீட்டாளர்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் முந்தைய முதலீட்டாளர்கள் மட்டும் சுமார் 500 முதல் 600 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
7 மடங்கு வளர்ச்சி
இந்தியாவில் இத்துறையில் 2018ஆம் ஆண்டிற்குள் சுமார் 22 பில்லியன் டாலர் (7 மடங்கு) அளவிற்கு உயரும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது.
பார்தி ஏர்டெல்
கத்தார் முதலீட்டு நிறுவனம் பிளிப்கார்ட் மட்டும் அல்லாமல் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதில் டிஃபனி, பார்க்லேஸ், கிரேடிட் சுசி ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதேபோல் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
பிளிப்கார்ட்
2014ஆம் நிதியாண்டில் மட்டும் சச்சின் மற்றும் பின்னி பன்சால் தலைமை வகிக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் அளவு நிதிகளை திரட்டியுள்ளது. இதில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அடக்கம்.
அமேசான்
மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சக போட்டி நிறுவனமான அமேசான் இவ்வருடம் 2 பில்லியன் டாலர் முதலீட்டுடன், 4 பில்லியன் டாலர் வர்த்தகம் குறிக்கோள் உடன் செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications