டெல்லி: டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் விமான சேவை ஜனவரி 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனையை வியாழக்கிழமை துவங்கியது இந்நிறுவனம், மேலும் ஸ்பைஸ்ஜெட் துவண்டுபோன நிலையில் விஸ்தாராவின் வருகை மக்கள் மத்தியில் விரைவாக சென்றடையும்.
டெல்லி - மும்பை - அகமதாபாத்
இந்நிறுவனம் முதற்கட்டமாக இந்தியாவில் டெல்லி - மும்பை, டெல்லி- அகமதாபாத், மற்றும் மும்பை - அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
விலை நிலைகள்
உள்நாட்டு விமான சேவையில் ஸ்பைஸ்ஜெட் வெளியேறிய நிலையில், அனைத்து நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறு நாறு நாறாக விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் விஸ்தாரா நிறுவனம் அனைத்து வழித்தடங்களிலும் சரியான கட்டணத்தையே அளித்துள்ளது. மேலும் துவக்க ஆஃப்ர் என்ற பெயரில் எந்த விதமான சலுகையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஒரே ஒரு சலுகை
இந்நிறுவனம் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு (ஃப்ரீக்குவண்ட் ஃப்ளையர்) மட்டும் சில சிறப்பு சலுகையை அளிப்பதாக அறிவித்துள்ளது.
குஜராத் பண்டிகை
மேலும் அகமதாபாத்க்கான விமானத்தை குஜராத் பண்டிகைக்கு 2 நாள் முன்னரே இயக்கப்படுவதால் இப்பகுதிகளில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.
ஸ்பைஸ்ஜெட்டுக்கு நன்றி
சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போட்டி இல்லாததால் இந்நிறுவனதிற்கு சந்தையை கைபற்ற மிகவும் சிறப்பான நேரமாக உள்ளது. மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விட்டுப்போன் இடத்தில் இந்நிறுவனம் விரைவாக கைபற்றும் என நம்புகிறது.
முழுமையான சேவை
விஸ்தாரா உள்நாட்டு விமான சேவை மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் விமான சேவையை அளிக்கிறது. இதன் மூலம் பயணிகள் இந்தியாவில் இருந்து எந்த ஒரு நாட்டிற்கு விமான நிறுவனங்களை மாற்றமல் செல்ல முடியும்.


Click it and Unblock the Notifications