பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி வகிதத்தில் மாற்றம்!! 8.5 சதவீதம்..
டெல்லி: இந்தியாவில் இருக்கும் 5 கோடி பிராவிடன்ட் ஃபண்ட் கணக்காளர்களின், நடப்பு நிதியாண்டின் டெப்பாசிட்களுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வட்டி விகித மாற்றத்தை பற்றி சென்ட்ரல் போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் அமைப்புடன் நடந்திய பேச்சுவார்த்தையின் முடிவின் மூலம் மத்திய நிதியமைச்சகம் 2014-15ஆம் நிதியாண்டிற்கான வட்டி வகிதத்தை மாற்றியுள்ளது.

மேலும் நிதியமைச்சகத்தின் இறுதியான உத்திரவு அளிக்கப்பட்டதுடன் வட்டி விகிதங்கள் மற்றப்படும் என ஊழியர் சேமலாப நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை நிதியமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்திற்கும், வருமான வரித்துறைக்கும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications