டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற 200 மில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்துடன் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு, முழு திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை காலை சமர்ப்பிக்க உள்ளது.
200 மில்லியன் டாலர் முதலீடு
2005ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தை உருவாக முக்கிய காரணமாக இருந்த அஜய் சிங் மற்றும் அமெரிக்காவின் தனியார் முதலீட்டு நிறுவனமான ஜே.பி மோர்கன் சேஸ் வங்கியும் இணைத்து இந்நிறுவனத்தின் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
கலாநிதிமாறன்
மேலும் இந்த 200 மில்லியன் டாலர் பங்குகளை இந்நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களில் பங்கு இருப்பில் இருந்து பெறப்படுகிறது.
17 கோடி ரூபாய்
இந்நிறுவனத்தின் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் 17 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. மேலும் இந்த தொகையை கொண்டு எண்ணெய் நிறுவனத்திற்கு ஸ்பைஸ்ஜெட் அளிக்க வேண்டிய நிலுவை தொகை செலுத்தவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நிலுவை தொகையின் அளவும்
இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர், ஏர்போர்ட் நிர்வாகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய நிலுவை தொகையின் அளவு 990 கோடி ரூபாயில் இருந்து 1,230 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
விமான போக்குவரத்து கழகம்
விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இச்சிக்கலில் இருந்து மீண்டு வர உதவிகள் செய்ய அமைச்சகம் தயாராக உள்ளது. ஆனால் இந்நிறுவனம் அளிக்க வேண்டிய அனைத்து நிலுவை தொகையும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications