மேக் இன் இந்தியா: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கருத்தை முழுமையாக மறுக்கும் அருண் ஜேட்லி!!

டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி திட்டமாக கருதப்படும் "மேக் இன் இந்தியா"-வின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்தியாவில் விற்கப்படுகிறதா அல்லது வெளிநாடுகளில் விற்கப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இத்திட்டத்தை பற்றி விமர்சனம் செய்தார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இதனை கண்டித்து மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி மேக் இன் இந்தியா திட்டத்தின் மையக் கருத்தே நாட்டில் குறைந்த செலவில் தரமான பொருட்களை தயாரிப்பது தான். இதனை வெளிநாடுகளில் விற்பதா இல்லை இந்தியாவில் விற்பதா என்பது இல்லை என ராஜன் கருத்துக்கு பதில் தெரிவித்தார் ஜேட்லி.

தரமான மற்றும் விலை குறைவான பொருட்கள்

தரமான மற்றும் விலை குறைவான பொருட்கள்

மேலும் உலக நாடுகளில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் சொந்த நாட்டில் தயாரிக்கும் பொருட்களை வாங்க நினைப்பதில்லை, அதைக்காட்டிலும் தரமான மற்றும் விலை குறைவான பொருட்களை மட்டுமே வாங்க விருப்பப்படுகிறது. இந்த வகையில் மேக் இன் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

"மேக் இன் இந்தியா" டூ "மேக் பார் இந்தியா"

டிசம்பர் மாத துவக்கத்தில் ரகுராம் ராஜன் புதிய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்ள இரட்களை சூட்டிக் காட்டினார். இதன் படி "மேக் இன் இந்தியா" சீனாவின் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி திட்டக்களை சார்ந்து இருந்தாலும், அது "மேக் பார் இந்தியா"(Make for india) ஆக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ராஜன் கருத்து தெரிவித்து இருந்தார்.

சீனா-இந்தியா

சீனா-இந்தியா

மேலும் ராஜன் சீனவில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை இந்தியாவில் அப்படியே செயல்படுத்துவது முற்றிலும் தவறானது, இந்தியா சீனாவிற்கு முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

5 வருட காலம்

5 வருட காலம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் விளைவு அடுத்த 5 வருடங்களில் தெரிய வரும். அதுவரை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் உலக நாடுகள் அனைத்தும் இத்திட்டத்தை சிறப்பாக வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+