டெல்லி: இந்தியாவில் நிலக்கரி உற்பத்திக்கு முறைகேடாக உரிமம் வழங்கியதை கண்டறிந்த உயர்நீதிமன்றம் 214 சுரங்கத்திற்கான உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது, இதனால் உற்பத்தி தடைப்பட்டது. இதன் விளைவாக நாட்டில் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இப்பிரச்சனையை களைய மத்திய அரசு நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாட்டை களையைவும், மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு நிலக்கரி உற்பத்திக்கான உரிமங்களை வெளிப்படையாக ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
முதற் கட்ட ஏலம்
நீதிமன்றத்தின் ஒப்புதலின் பேரில் மத்திய அரசு முதற்கட்டமாக சுமார் 24 சுரங்கத்தில் ஆன்லைன் மூலம் ஏலத்தை நடத்தில நிலக்கரி உற்பத்திக்கான உரிமத்தை வழங்க முடிவு செய்துள்ளது.
24 சுரங்கம்
இந்த 24 சுரங்கத்தில் 7 உரிமங்கள் சத்தீஸ்கர், 6 உரிமங்கள் மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய இடங்களில் தளா 3 உரிமங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா தலா ஒரு உரிமங்களும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பியூஷ் கோயல்
மேலும் இந்த மொத்த ஏலமும் வெளிப்படையாகவும், திறனுள்ள வகையில் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்பட உள்ளதாக நிலக்கரி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ஏலம் நடத்தப்படும் தளம் இதுவே http://www.mstcecommerce.com/
ஏல விண்ணப்பங்கள்
மத்திய அரசு முதற்கட்டமாக நடத்தப்படும் ஏலத்திற்கு விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 31ஆம் தேதிவரை பெறப்படுகிறது, இதன் முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதியில் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications