சென்னை: இந்தியாவில் அதிகம் லாபம் தரும் முதலீட்டு திட்டங்களில், பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் இன்றைய காலகட்டத்தில் இதன் மீதான வர்த்தகம் மிகவும் போட்டி நிறைந்தாக மாறிவிட்டது.
பங்கு சந்தையில் முதலீடு செய்ய முதலில் நமக்கும், டீமேட் கணக்கு தேவை, இதன் பின்னரே நமது முதலீட்டை சந்தையில் போட முடியும். சில வருடங்கள் முன்பு டீமேட் கணக்கை திறக்க மிகவும் கஷ்டம், ஆனால் இப்போது டீமேட் மற்றும் ப்ரோகிங் கணக்கை துவங்க, ப்ரோகிங் நிறுவனங்களில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பல நிறுவனங்கள் (நம்பிக்கையான நிறுவனங்கள்) இலவச டீமேட் மற்றும் (அல்லது) இலவச ட்ரேடிங் கணக்குகளை அளிக்கிறது. அப்படி இலவசமாக டீமேட் அல்லது ட்ரேடிங் கணக்கை அளிக்கும் நிறுவனங்களை இப்போது பார்போம்.
ஷேர்கான்
ஷேர்கான் நிறுவனம், மக்களுக்கு ஆன்லைன் ட்ரேடிங் மற்றும் ப்ரோகிங் கணக்கை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. ஏ.எம்.சி. கட்டுவதன் மூலம் ஒருவர், தமக்கு தேவையான ட்ரேடிங் திட்டங்களை பெற்றுக் கொள்ளும் வசதியை இந்நிறுவனம் அளிக்கிறது. இதன் பின்னர் நீங்கள் கட்ட வேண்டிய தரகு தொகையுடன் சரி செய்யப்படும். இதனால் தரவு கட்டணங்கள் மிச்சமாகும். ஆய்வு அறிக்கைகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளால் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இந்நிறுவநம் கவர்கிறது.
எஸ்.எம்.சி
இலவச கணக்கு மற்றும் இலவச டீமேட் கணக்கை அளிக்கிறது எஸ்.எம்.சி. நிறுவனம். ஒருவர் தன் வங்கி கணக்கையும் ப்ரோகிங் கணக்கையும் ஒருங்கிணைத்து கொள்ளலாம். இதனால் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை சுலபமாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் ஆயுட்கால இலவச ஏ.எம்.சி. தேர்வையும் நிறுவனம் அளிக்கிறது. இதிலுள்ள பெரிய பயனே பேக் ஆஃபிஸ் 24X7 மணிநேரமும் அணுகலாம். இதனால் பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டு விட்டதா அல்லது இருப்பு மாற்றப்பட்டு விட்டதா அல்லது டீமேட் கணக்கை பற்றி எது வேண்டுமானாலும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சுஷில் ஃபைனான்ஸ்
சுஷில் ஃபைனான்ஸ் நிறுவனமும் இலவச ட்ரேடிங் மற்றும் டீமேட் கணக்கை அளிக்கிறது. BSE/NSE ரொக்கம் மற்றும் முதலீடு சந்தையின் டிரைவேடிவ் பிரிவில் வாங்கவும் விற்கவும் இந்த நிறுவனம் த்ரீ-இன்-ஒன் ஆர்டர் ஸ்க்ரீனை வழங்கி உதவி செய்கிறது. தரவு கட்டணங்கள் இணங்கு தன்மையுடன் விளங்கும். நீங்கள் செயல்படுத்தும் பரிவர்த்தனை அளவை பொறுத்து அது நிர்ணயிக்கப்படும்.
ஐ.ஐ.எஃப்.எல்
ஐ.ஐ.எஃப்.எல். நிறுவனமும் இலவச ட்ரேடிங் மற்றும் டீமேட் கணக்கை திறக்க அனுமதிக்கிறது. கணக்கை திறப்பதற்காக நீங்கள் கட்டிய கட்டணங்கள், கணக்கு திறந்த முதல் 90 நாட்களில் ஏற்பட்ட தரகு கட்டணங்களோடு ஈடு செய்யப்படும். போட்டி விகிதத்தில் தரகு கட்டணம் பெறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளருக்கென தனிப்பட்ட ரேலேஷன்ஷிப் மேலாளர் நியமிக்கப்படுவார். பங்குகளை வாங்கவும் விற்கவும் உதவிடும் ஆய்வு அறிக்கைகளை பெறவும் நிறுவனம் வழிவகை செய்கிறது.
ஏஞ்செல் ப்ரோகிங்
நம் நாட்டில், இலவசமாக டீமேட் கணக்கை வழங்கும் முதன்மையான ப்ரோகிங் நிறுவனங்களில் ஏஞ்செல் நிறுவனமும் ஒன்றாகும். இவர்கள் வசூலிக்கும் பங்கு தரகு கட்டணங்களும் சேவைகளும் கூட சலுகை அடிப்படையில் கிடைக்கிறது.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications