பணி நீக்கத்தை எதிர்த்து இணையதளத்தில் போராட்டம்!! டிசிஎஸ் ஊழியர்கள்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தில் சுமார் 30,000 பணியாளர்களை வருகிற பிப்ரவரி மாதம் 2015ஆம் ஆண்டுக்குள் நீக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளார். இதன்படி சில பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லிப்-ம் நிர்வாகம் கொடுத்துள்ளது.

 

இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்நிறுவன பணியாளர்கள் சமுக வளைதளங்கள் மற்றும் இணையதள வாயிலாக ‘We are against TCS layoff' என்ற பெயரில் போராட்டங்கள் நடத்திவருகினறனர்.

வெளிப்படையானவை இல்லை..

வெளிப்படையானவை இல்லை..

மேலும் இந்த வளை பதிவில் இந்நிறுவனதத்தின் பணியாற்றும் பணியாளர்களின் திறன்ஆய்வு முறைமுகமாக நடைபெறுவதாகவும், இதனால் பல ஆயிர பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை வெளிப்படையாக்க வேண்டும் எனவும் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரிய மேட்டர் ஒன்றும் இல்லை..

பெரிய மேட்டர் ஒன்றும் இல்லை..

இதுக்குறித்து இந்நிறுவன செய்தி தொடர்பாளர்களிடம் கேட்டபோது,"இந்த ஆன்லைன் போராட்டத்தை குறித்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு பெரிய விஷயம் இல்லை, மேலும் இது மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் நடக்கும் மிகவும் சாதாரணமான விஷயம்" என்று நிதாணமாக தெரிவித்தார்.

பேஸ்புக்கில் போராட்டம்..

பேஸ்புக்கில் போராட்டம்..

சமுக வளைதளமான பேஸ்புக்கில் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இணைந்து தனியொரு பக்கத்தை திறந்துள்ளனர். இந்த பக்கத்தை காணவும், பிறருக்கு பிகரவும் இதை கிளிக் செய்யவும்.

யூடியூப்
 

யூடியூப்

பேஸ்புக் மட்டும் அல்லாமல் யூடியூப்-இல் தனியொரு விடியோ பதிவையும் இணைந்துள்ளனர். இதனை பார்க்க இதை கிளிக் செய்யவேண்டும்..

சாப்ட்வேர் பணியாளர்களுக்கான உதவிக்குழு

சாப்ட்வேர் பணியாளர்களுக்கான உதவிக்குழு

இந்தியாவில் அனைத்து துறை பணியாளர்களுக்கான பிரச்சனைகளை களைய ஏதாவது ஒரு உதவிக்குழு உள்ளது. ஆனால் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் ஐடி பணியாளர்களின் வாழ்வு நிலையை காப்பாற்ற ஒரு குழுக்கூட இல்லை என்று பல காலமாக கேள்வி இருந்தது வந்தது. இதற்காக சென்னையில் Forum for IT Employees என்ற புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

பணி நீக்கத்தின் அளவு

பணி நீக்கத்தின் அளவு

டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 55,000 பேரின் திறன் ஆய்வு செய்து அவர்களுக்கான நிலையை உணர்த்த உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது நிர்வாகம். இதில் 25,000 பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் மீதமுள்ளவை வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள்.

நிறுவனத்தின் நிலை..

நிறுவனத்தின் நிலை..

மேலும் இந்த பணியாளர்கள் வெளியேற்றத்தால் நிறுவனத்தின் நிலை 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் தொய்வடையும். இந்த தொய்வும் பணியாளர்களின் சம்பள உயர்வில் தான் பாதிக்கும்.

மொத்த பணியாளர்கள்

மொத்த பணியாளர்கள்

இந்நிறுவனத்தில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் சுமார் 3.13 இலட்ச பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS refutes online forum's layoff numbers

An online forum formed in Chennai — ‘We are against TCS layoff’ — has posted on social networks that the country’s largest software exporter is planning to sack “25,000 non-performers by the end of February 2015”.
Story first published: Tuesday, December 30, 2014, 11:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X