8 அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்டர்நேஷனல் ஆபரேஷன்ஸ் மற்றும் லைப் பாசிடிவ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் 34.77 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்தில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனமான லூபின் நிறுவனத்திற்கான 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னிய முதலீட்டு திட்டத்திற்கான பாரிந்துறையை அடுத்த கட்டத்திற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் எடுத்து சென்றுள்ளது.

லூபின் நிறுவனத்தின் அன்னிய முதலீட்டு அளவை 49%ஆக உயர்ந்த திட்டம்..

மேலும் இந்த முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் அன்னிய முதலீட்டின் அளவு 49 சதவீதமாக உயரும் எனவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

"அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய (FIPB) பரிந்துரைகளின் படி 34.77 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது" FIPB அமைப்பின் அதிகாரப் பூர்வ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

லூபின் நிறுவனத்தின் அன்னிய முதலீட்டு அளவை 49%ஆக உயர்ந்த திட்டம்..

சி.எஸ்.சி நிறுவனம் 30 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புள்ள எல் எல் பி திட்டத்திற்கான அனுமதியை கோரியிருந்த அதே வேளையில் , லைப் பாசிடிவ் நிறுவனம் அன்னிய முதலிட்டை தற்போதுள்ள 96 சதவிகிதத்திலிருந்து 99 சதவிகிதமாகவும் மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 4.61 கோடி அளவிற்கு அன்னிய நேரடி முதலீட்டை பெறவும் அனுமதி கோரியிருந்தது.

மேலும் மகாநகர் கேஸ் லிமிடெட், மெடிகாமென் பையொடெக் லிமிடெட், டியுடர் விஸ்தா குளோபல் பிரைவேட் லிமிடெட், வென்சுரா இந்தியா பிரைவேட் லிமிடெட், சிச்மார்ட் சர்விசஸ் எல்எல்பி மற்றும் மஹிந்திரா சி ஐ இ ஆட்டோமோடிவ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டு திட்டங்களை நிலுவையில் வைத்துள்ளது.

லூபின் நிறுவனத்தின் அன்னிய முதலீட்டு அளவை 49%ஆக உயர்ந்த திட்டம்..

சின்ஜீனி இண்டர்நேஷனல் லிமிடெட், இந்தியா வால்யு பண்ட் ஐவி, எஸ் எம் இ கேபிடல் மார்கெட் கார்பொரேஷன், எஸ் என் சி-லாவாலின் மொரிஷியஸ் லிமிடெட் மற்றும் வேரின்ட் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட சுமார் 12 திட்டங்களின் மீதான முடிவினை அரசு ஒத்திவைத்துள்ளது.

இதே வேளையில் டுடே மேகசின்ஸ் லைப் ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் மற்றும் டி சி கேபிடல் மேனேஜர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களின் அன்னிய நேரடி முதலீட்டு ஒப்பந்த விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொண்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 FDI proposals worth Rs 35 crore cleared

Government has cleared eight foreign investment proposals worth about Rs 34.77 crore, including that of CSC Computer Sciences International Operations and Life Positive Pvt Ltd.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X