டெல்லி: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றத்தால் சில்லறை விற்பனையில் பாதிப்பு இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.ரூ.6,000 கோடி வருமானம்2014ஆம் ஆண்டின் நவம்பர் மாத்தில் இருந்து மூன்றாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 6,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
நிதி திரட்டல்
நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலை சரிவை பயன்படுத்தி அதிக வருமானத்தை ஈட்டிவிட வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். இதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு 2015ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளது அரசு.
விலை உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கலால் வரி உயர்வின் தாக்கத்தை சரிசெய்த பின்னர், பெட்ரோல் விலை 3.22 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் குறைந்துள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்கள்
மத்திய அரசின் உள்கட்டமைப்பு துறையில், கனவு திட்டமான 15,000 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாலைகள், என பலவற்றை அடுத்த இரு வருடங்களில் துவங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியை திரட்டவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 2 ரூபாய் கலால் வரியை உயர்த்தியுள்ளது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.
இன்று முதல்
மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications