சென்னை: சொகுசு கார்களின் மூடி சூடா மன்னாக விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் 10,000 வாகனங்களை விற்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் துவங்கிய முதல் இதுவரை, விற்பனையில் 10,000 என்ற இலக்கை இதுவரை அடைந்ததில்லை என இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் விற்பனையில் 13 சதவீத உயர்வை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இரண்டவது முறையாக இந்நிறுவனம் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஆடியை தொடர்ந்து பென்ஸ்
இந்திய சந்தையில் 10,000 கார்களை விற்ற பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களில் பென்ஸ் இரண்டாவது, முதன் முறையாக இந்த இலக்கை எட்டியது ஆடி நிறுவனம் தான்.
10 புதிய மாடல் கார்கள்
இந்தியாவில் விற்பனையை பெருக்க பென்ஸ் இந்த வருடம் மட்டும் 10 புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 14 புதிய டீலர்கள் மற்றும் விற்பனை அங்காடியை திறந்துள்ளது.
மக்களின் ஆர்வம்
கடந்த 5 வருடங்களில் இந்தியாவில் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மத்தியில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை காட்டிலும், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளின் மீது மோகம் அதிகரித்துள்ளது.
விற்பனை இரட்டிப்பு
மேலும் அடுத்த 5 வருடங்களில் இந்நிறுவனங்களின் விற்பனை 2 மடங்காக அதிகரிக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications