பெங்களுரூ: கடந்த வருடம் இந்தியாவின் இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனார், இதனால் டெக்னாலஜி நிறுவனங்களில் முதலீடு கடுமையாக குறைந்தது. ஆனால் இந்த வருடம் இ-காமர்ஸ் துறை நிறுவனங்கள் தங்களின் வரத்தகத்தை பெருக்க போட்டோசூட், டுரோன் டெலிவரி மற்றும் பிற தொழில்நுட்பம் சார்ந்த பல உதவிகளை நாடியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த வருடம், இகாமர்ஸ் நிறுவனங்களே டெக்னாலஜி நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்யப்பட உள்ளனர் என சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் இன்ஜினீயரிங் பிரிவின் துணைதலைவரான சமீர் நிகாம் கூறுகையில்,"நாங்கள் எப்போதும் துவக்க நிறுவனங்களையே நாடுகிறோம், இத்தகைய நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் வாய்ப்பு நாங்கள் எப்போதும் ஏற்க மறுப்பதில்லை." என தெரிவித்தார்.
நிதி திரட்டல்
கடந்த மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 700 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மதிப்பீடு சந்தையில் 7 பில்லியன் டாலர் நிறுவனமாக உறுவெடுத்துள்ளது.
3.1 பில்லியன் டாலர் முதலீடு
கடந்த வருடம் இ-காமர்ஸ் துறையில் 46 டீல்களில் மொத்தம் 3.1 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதேவே தொழில்நுட்ப நிறுவனங்களில் 48 டீல்களில் 10இல் ஒரு பகுதியே முதலீடாக கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல்
2010ஆம் ஆண்டு முதல் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்கள் 5 தொழில்நுட்ப நிறுவனங்களை கைபற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications