ரூ.65,000 கோடி வருமானத்தை ஈட்டும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!!

டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசிற்கு சுமார் 64,840 கோடி ரூபாய் வருமான கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் 380.75 மெகாஹெட்ஸ் அளவிலான 2ஜி ஸ்பெக்ட்ரத்தை மூன்று பேண்டுகள், ஆதாவது 800 மெகாஹெட்ஸ், 900 மெகாஹெட்ஸ் மற்றும் 1800 மெகாஹெட்ஸ் பேண்டுகளில் ஏலம் விட உள்ளது. இதுமட்டும் அல்லாமல் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த 2,100 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ரமும் இம்முறை ஏலத்தில் வர உள்ளது.

ஒப்புதல்

ஒப்புதல்

800 மெகாஹெட்ஸ் பேண்டில் ஒரு மெகாஹெட்ஸ் ஸ்பெக்ரம் 3,646 கோடி ரூபாயும், 900 மெகாஹெட்ஸ் பேண்டில் ஒரு மெகாஹெட்ஸ் ஸ்பெக்ரம் 3,980 கோடி ரூபாயும், 1800 மெகாஹெட்ஸ் பேண்டில் ஒரு மெகாஹெட்ஸ் ஸ்பெக்ரம் 2,191 கோடி ரூபாய் என்று விலைகளை நிர்ணயம் செய்து அறிக்கையை தொலைதொடர்பு அமைச்சம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

பிப்ரவரி 2014

பிப்ரவரி 2014

2ஜி ஊழல் புகார்களுக்கு பின்பு பிப்ரவரி 2014ஆம் ஆண்டில் நடைபெற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மத்திய 62,162 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. அடுத்த மாதம் நடைபெறும் ஏலம் மூலம் கிடைக்கப்பெறும் நிதி, 4.1 சதவீதம் ஜிடிபியை அடைய திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

கடைசி நாள்

கடைசி நாள்

இந்த ஏலத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 2, விண்ணப்பங்களின் தேர்வு நடைபெறும் நாள் பிப்ரவரி 13, ஏலம் நடைபெறும் தேதி பிப்ரவரி 23ஆம் தேதியாகும்.

3ஜி ஸ்பெக்ட்ரம்

3ஜி ஸ்பெக்ட்ரம்

இந்த ஏலத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் 3ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடைபெற உள்ளது என தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

33 சதவீத பணம்

33 சதவீத பணம்

ஏலத்தில் 1800 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் வெற்றி பெற்றவர்கள் 10 நாட்களுக்குள் ஏலத்தொகையில் 33 சதவீத முன்பணத்தை செலுத்திவிட வேண்டும், 900 மற்றும் 800 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் வெற்றிபெற்றவர்கள் 10 நாட்களுக்குள் ஏலத்தொகையில் 25 சதவீத தொகை செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை அடுத்த இரண்டு வருடத்தில் தவணை முறையில் செலுத்த மத்திய அரசு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

22 நிறுவனங்கள்

22 நிறுவனங்கள்

இந்தியாவில் மொத்தம் 22 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உள்ளது இவை அனைத்தும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு பெற தகதி உடையது என்றும் தொலைதொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+