பெங்களுரூ: விஜய் மல்லையா தலைமையில் செயல்பட்ட மங்களுரூ கெமிக்கல் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை கைபற்ற துடித்த தீபக் பெர்டிலைசர்ஸ் நிறுவனம் திடீரென 2.20 சதவீத பங்குகளை விற்றுள்ளது.
மங்களுரூ கெமிக்கல் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை முதலீட்டு நிறுவனங்களான தீபக் பெர்டிலைசர்ஸ் மற்றும் ஜுவாரி குரூப் இடையே பங்குகள் கையிருப்பு அளவின் படி நிறுவனத்தின் நிர்வாகத்தை கைபற்ற கடந்த சில மாதங்களாக போராடி வந்த நிலையில் ஜுவாரி குரூப் கைபற்றியது. இதன் மூலம் விஜய் மல்லையா தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
26.07 இலட்சம் பங்குகள்
மும்பை பங்கு சந்தைக்கு தீபக் பெர்டிலைசர்ஸ் சமர்ப்பித்த அறிக்கையில், இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான எஸ்சிஎம் சாயில்பெர்ட் லிமிடெட் நிறுவனம் 26.07 இலட்சம் பங்குகளை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது மங்களுரூ கெமிக்கல் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்நிறுவனம் வைதிருந்த 2.20 சதவீத பங்குகள் ஆகும்.
29.05 சதவீதம்
இதன் மூலம் மங்களுரூ கெமிக்கல் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தீபக் பெர்டிலைசர்ஸ் வைத்திருந்த பங்குகளின் அளவு 31.25 சதவீதத்தில் இருந்து 29.05 சதவீதமாக குறைந்துள்ளது.
பங்கு இருப்பு
செப்டம்பர் 30, 2014ஆம் அன்று வெளியிட்ட அறிக்கையில் படி மங்களுரூ கெமிக்கல் மற்றும் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் யுபி குரூப் 21.97 சதவீத பங்குகளும், ஜூவாரி குரூப் 16.47 சதவீத பங்குகளும், தீபக் பெர்டிலைசர்ஸ் 31.25 சதவீத பங்குகளும் வைத்திருந்தது.
பங்கு சந்தை
தீபக் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையினால் மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications