இன்போசிஸ் போனஸ்: 3,000 பணியாளர்களுக்கு ஐபோன்6 பரிசு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களின் வித்தியாசமான சிந்தனையை பாராட்டி 3,000 பணியார்களை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிள் ஐபோன்6 போன்களை பரிசாக வழங்கியுள்ளது.

 

இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவாக பதவியேற்றிய விஷால் சிக்கா பணியாளர்களை மகிழ்விப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இத்தகைய செயல் அனைத்தும் பணியாளர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்கவும், பெரு நிறுவனங்களில் இருந்து புதிய பணியாளர்களை ஈர்க்கவும் தான் என ஆர்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

ஹலிடே போனஸ்

ஹலிடே போனஸ்

இந்நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய 3,000 பணியாளர்களுக்கு இன்போசிஸ் நிர்வாகம் ஐபோன் 6 பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மேல் ஹலிடே போனஸ் என்ற வார்த்தையை பதித்தும், சிக்கா அவர்களின் கையெழுத்திட்ட பாராட்டு கடிதமும் அளிக்கப்படுகிறது.

பணியாளர்களின் நிலை..

பணியாளர்களின் நிலை..

இதுக்குறித்து எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு சில ஐரோப்பிய பணியாளர்கள் அளித்த தகவலின் படி, "எங்களின் அலுவலகத்தில் 2 பணியாளர்களுக்கு ஐபோன் கிடைத்துள்ளது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் ஆனால் யார் டாப் ஃபர்பாமர் என்ற விபரத்தை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றும், பிற பணியாளர்களின் consolidated relative ranking நிலையை பற்றியும் நிர்வாகம் அறிவிக்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பணியாளர்கள் வெளியேற்றம்
 

பணியாளர்கள் வெளியேற்றம்

கடந்த வருடம் இந்நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்றும் 20 சதவீதமாக இருந்தது, சிக்காவின் நியமனத்திற்கு பிறகு இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றும் 13-15 சதவீதசமாக குறைந்துள்ளது என இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரவின் ராவ் தெரிவித்தார்.

டிரஸ் கோட்

டிரஸ் கோட்

மேலும் சிக்கா நியமணத்திற்கு பிறகு இன்போசிஸ் நிறுவனத்தின் டிர்ஸ கோட் மாறியுள்ளது, ஆண் பணியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் டை அணிந்தால் போதும் என அறிவித்தார். மேலும் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் இண்டர்நெட் சேவை அளிக்கவும் அனுமதி அளித்துள்ளார்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

கடந்த வருடம் பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அளிக்க மூக்கால் அழுத இன்போசிஸ் இந்த வருடம் ஐபோன் பரிசாக அளித்துள்ளது. இது இந்நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றம் என்றே சொல்லலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys gifts 3,000 employees iPhone6 handsets

Ever since Chief Executive Vishal Sikka took the helm at Infosys, his focus has clearly been on the employees- from easing internal processes to encouraging out-of-the-box thinking. Now, possibly the first time ever, the IT outsourcing major has gifted some high performers Apple's latest iPhones as a token of appreciation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X