பெங்களுரூ: ஆன்லைன் ரியல் எஸ்டேட் தளமான காமன்ஃபலோர்.காம் (CommonFloor.com) நிறுவனத்தில் கூகிள் கேபிட்டல் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக இந்நிறுவனம் வியாழக்கிழமையன்று அறிவித்தது. ஆனால் தொகையின் விபரத்தை பற்றி தெரிவிக்கவில்லை.
இணையதள தேடல் நிறுவனமான கூகிள் நிறுவனத்தின் முதலீட்டு கிளை நிறுவனமான கூகிள் கேப்பிடல் பெங்களுரில் தலைமையாக கொண்டு செயல்படும் காமன்ஃபலோர்.காம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

காமன்ஃபலோர்.காம் நிறுவனம் தொடங்கப்பட்ட 2007-ஆம் வருடத்தில் இருந்து, மூன்று சுற்றுக்களில், டைகர் குளோபல் மற்றும் ஆக்சல் பார்ட்னர்ஸ் அவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் சந்தையில் மாற்றம் கொண்டு வர விரும்பும் தங்கள் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையின் மீது கூகிள் கேபிட்டல் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சியாக விளங்கும் இந்த முதலீடு, என்பதை எண்ணி தங்கள் குழு சந்தோஷமாக உள்ளதாக CommonFloor.com நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ.-வான திரு. சுமித் ஜெயின் கூறியுள்ளார்.
"பொருட்கள் மற்றும் தொழிட்நுட்பத்தில் புதுமைகள், மார்க்கெட்டிங் மற்றும் பணியமர்த்தல் ஆகியவற்றில் நாங்கள் முதலீடு செய்வோம். எங்கள் தொழிலின் வளர்ச்சி அதிகரிப்பதை தொடர, கூகிள் கேப்பிடலின் பங்குதாரர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு நிபுணத்துவத்தை எதிர்பார்க்கிரோம்." என அவர் கூறினார்.

2015 ஆம் வருடத்திற்கான பணியமர்த்தல் பற்றி கேட்ட போது, "சிறந்த நபர்களை வேலையில் அமர்த்தினாலே பாதி வேலை முடிவடைந்து விட்டது. அது தான் எங்களுக்கு முக்கியமானது கூட. பணியமர்த்தல் தொடர்ந்து நடைபெறும். கைப்பேசி மூலமாக மட்டுமே பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கும் நிபுணத்துவத்தை கொண்டுள்ள நிறுவனர்களையும் குழுவையும் அடங்கியுள்ள பாக்பி (Bakfy) என்ற பெங்களூருவில் உள்ள நிறுவனத்தை சமீபத்தில் தான் நாங்கள் கையகப்படுத்தினோம்." என ஜெயின் கூறினார்.
தங்கள் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1 லட்சத்திற்கும் மேலான குடியிருப்பு திட்டங்களை காமன்ஃபலோர்.காம் கொண்டுள்ளது. இந்த தளம் ஏற்கனவே 1 கோடி வீடுகளை படமிட்டுள்ளது.
1000 பணியாளர்களுக்கும் அதிகமானோரை அடங்கிய குழுவை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இது 2007 ஆம் ஆண்டில் சுமித் ஜெயின், லலித் மங்கல் மற்றும் விகாஸ் மல்பானி அவர்களால் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. சொத்து தேடல், அடுக்குமாடி நிர்வாகம் மற்றும் விற்பனையாளர் நிர்வாகம் ஆகியவற்றை அளிக்கும் காமன்ஃபலோர்.காம், ஒரு நபரின் குடியிருப்பு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும்.


Click it and Unblock the Notifications