அம்பானி, பிர்லாவை வளைத்து போட்டது குஜராத்!! 120,000 கோடி முதலீட்டு திட்டம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை 3 நாள் நடக்க இருக்கும் 7வது வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்திக்கு பிரதமரின் அழைப்பை எற்று இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதல் முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய பல பெரும் புள்ளிகள் அடக்கம்.

 

இக்கூட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் அடுத்த 18 மாதங்களுக்குள் 1,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதுமட்டும் அல்லாமல் பல தலைவர்கள் அதிர்ச்சி அளிக்கும் முதலீட்ட திட்டங்களை அறிவித்தனர்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் அடுத்த 18 மாத காலத்தில் 1,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், அதில் பெரும் பகுதி குஜராத் பெட்ரோகெமிக்கல் காம்பிளக்ஸில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

குமாரமங்கலம் பிர்லா

குமாரமங்கலம் பிர்லா

முகேஷ் அம்பானியை தொடர்ந்கு அதித்தியா பிர்லா நிறுவனத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா பேசுகையில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் வர்த்தக ஸ்திரதன்மையை மேம்படுத்த 20,000 கோடி முதலீட செய்யவதாக அறிவித்தார்.

அதானி மற்றும் சன் எடிசன்
 

அதானி மற்றும் சன் எடிசன்

அதேபோல் இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வருடம் நுழைந்த அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி அவர்கள் அமெரிக்காவின் சன்எடிசன் நிறுவனத்துடன் இணைந்து சோலார் பார்க் அமைக்க 25,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தார். அதுமட்டும் அல்லாமல் எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தை போல் எண்ணெய் உற்பத்தியில் இறங்க அதானி குழுமம் அஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.

பல முதலீடுட்டு திட்டங்கள்

பல முதலீடுட்டு திட்டங்கள்

மேலும் 7வது வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட் கூட்டத்தின் மூலம் குஜராத்தில் 15 இலட்சம் கோடி ரூபாய் (240 பில்லியன் டாலர்) முதலீடு பெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தின் மூலம் இம்மாநிலத்தில் தொழில் துவங்க 21,000 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக சில கணிப்புகள் தெரிவித்துள்ளது.

முக்கிய தலைகள்

முக்கிய தலைகள்

கலந்து கொண்ட அனைவருமே பெரிய தலைகளாக இருந்தாலும், அரசியல் பெரும் தலைகளாக யுனைடெட் நேஷன்ஸ் பொது செயலாளர் பேன் கி-மூன், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜான் கெரி மற்றும் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிற நாட்டு தலைவர்கள்

பிற நாட்டு தலைவர்கள்

இக்கூட்டத்தில் இந்திய அமைச்சர்கள் கலந்து கொண்டத்து மட்டும் அல்லாமல் பூட்டான் மற்றும் மாசிடோனியா நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் 200 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

கூட்டணி

கூட்டணி

வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஹாலந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய எட்டு நாடுகளுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.

பிற மாநிலங்களின் நிலை..

பிற மாநிலங்களின் நிலை..

இந்தியாவில் இருக்கும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் குஜராத் பக்கம் சென்றுவிட்டால் இந்தியாவின் பிற மாநிலங்களின் நிலை என்ன??

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi made the right noises at Vibrant Gujarat summit

Prime Minister Narendra Modi, the shrewd politician that he is, cleverly raised the bar of the 7th Vibrant Gujarat Business Summit in Gandhinagar on Sunday, two Indian corporate giants pledged an investment of Rs 120,000 crore or about $19 billion dollars in gujarat.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X