2015ஆம் ஆண்டில் இந்தியா 6.4% வளர்ச்சியை எட்டும்!! உலக வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஞாயற்றுகிழமை துவங்கிய 3 நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், 2015ஆம் நிதியாண்டில் இந்தியா கண்டிப்பாக 6.4 சதவீதம் அளவிற்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகைய வளர்ச்சிக்கான பல சாத்தியக்கூறுகள் மிகவும் தெளிவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 
2015ஆம் ஆண்டில் இந்தியா 6.4% வளர்ச்சியை எட்டும்!! உலக வங்கி

எங்களது கணிப்பில் இந்தியா 2015ஆம் ஆண்டில் வளர்ச்சியிலும், முதலீட்டில் அதிகம் கவரக்கூடியதாகவும் இருக்கும் என உலக பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளோம் என்றும் தெளிவுப்படுத்தினார்.

2015ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி நிதாணமாக இருந்தாலும், 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என ஜிம் யோங் கிம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் இந்தியா 6.4% வளர்ச்சியை எட்டும்!! உலக வங்கி

மேலும் அவர் கடந்த இரு வருடங்களாக இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், மூன்றாவது காலாண்டில் 5.3 சதவீதமாக வளர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் அதிகளவிலான வளரச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் நாட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் அடுத்த 2 வருடத்தில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World Bank projects 6.4% economic growth in India in 2015

Indian economy is likely to grow at 6.4 per cent in 2015 and accelerate further in the next year on the back of steps being taken by the Narendra Modi-led NDA government, World Bank President Jim Yong Kim said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X