மீண்டும் பந்தயத்தில் குதித்தது இன்போசிஸ்!! மெர்சலான டிசிஎஸ்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய சாப்ட்வேர் துறையில் 10 ஆண்டுகளுக்கும் அதிகாமான காலம், மிகவும் லாபகரமாக திகழ்ந்த இன்போசிஸ் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் நிர்வாக பிரச்சனைகளால் கடுமையான பின்னடைவை சந்தித்தது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப அளவீடுகள் சரிந்தது.

 

ஆனால் இப்போது இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு இணையாக நிற்கிறது. இவை அனைத்தும் விஷால் சிக்காவின் நியமனத்திற்கு பின் நிகழ்ந்தது குறிப்பிடதக்கது.

டிசிஎஸ் - இன்போசிஸ்

டிசிஎஸ் - இன்போசிஸ்

2013ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இன்போசிஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்து. அதை தொடர்ந்து வருடாந்திர இறுதியில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 30.2 சதவீதமாகவும், இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 21.9 சதவீதமாகவும் இருந்தது.

ஐடி பணியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

ஐடி பணியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்

ஐடி பணியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கொண்டு இருக்கிறது. கடைசி ஸ்லைடரை வரை கொஞ்சம் பொருமையாக செல்லுங்கள்.

ஆப்ரேட்டிங் மார்ஜின்

ஆப்ரேட்டிங் மார்ஜின்

நிறுவனத்தின் வருவாயில் அனைத்து வகையான செலவுகளுக்கு பின்னால் இருக்கும் இருப்பு தொகையே ஆப்ரேட்டிங் மார்ஜின் என கருதுகிறோம். அதேபோல் ஒரு நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் என்பது நிறுவனத்தின் வளர்ச்சியின் பிம்பம் ஆகும்.

ஆப்ரேடிங் மார்ஜின் = (ஆப்ரேடிங் இன்கம் / நெட் சேல்ஸ்)

2014ஆம் ஆண்டின் நிலை
 

2014ஆம் ஆண்டின் நிலை

கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனம், தனது 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதன் படி இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் கடந்த வருடத்தை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆதாவது தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 26.7 சதவீதமாக உயர்ந்துள்ளது, டிசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 26.8 சதவீதம். வெறும் 0.1% வித்தியாசம் மட்டுமே.

6 சதவீத உயர்வு

6 சதவீத உயர்வு

நிறுவனத்தின் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் விஷால் சிக்காவின் நியமனம் தான் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

பந்தையம்...

பந்தையம்...

இதன் மூலம் விஷால் சிக்காவின் நியமனம் நியாமானது. கடந்த இரண்டு வருடமாக இந்திய ஐடி நிறுவனங்களின் பந்தைய ஒட்டத்தில் பன் தங்கிய இன்போசிஸ் இன்று முன்னிலை வகிக்க துவங்கியுள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் தவிர பிற நிறுவனங்களான ஹெச்சிஎல், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் முடிவுகள் கிடைத்த பின் முன்னிலையில் யார் உள்ளனர் என்பதை பார்க்கலாம்.

டிசிஎஸ் பணியாளர் வெளியிட்ட ஆடியோ

டிசிஎஸ் பணியாளர் வெளியிட்ட ஆடியோ

டிசிஎஸ் நிறுவனம் 25,000 பணியாட்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பணியாட்களை எப்படி அர்த்தமற்ற காரணங்களுக்காக வெளியேற்றுகிறார்கள் என்பதை நேரடியாக இங்கு கேட்கலாம். கிளிக்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys is now neck-and-neck with TCS on operating margins

Infosys was known for having the fattest margins in the IT industry in the last decade, but over the past two years, it shrank dramatically. In the second-quarter of fiscal 2013, TCS overtook Infosys to become the most profitable IT company in the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X