பெங்களுரூ: ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்தியாவில் 10,000 மில்லியனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என இந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது. இத்தளத்தின் மூலம் தங்களது பொருட்களை எளிய முறையில் விற்பனை செய்த 10,000 விற்பனையாளர்கள் தற்போது மில்லியனர்களாக திகழ்கின்றனர்.
2014ஆம் ஆண்டு மட்டும் 2,000 விற்பனையாளர்கள் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்ய பிளிப்கார்ட் நிறுவனம் உதவியுள்ளது, இதில் 50 பேர் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வர்த்தகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.
30% வளர்ச்சி
2013ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் 2014ஆம் ஆண்டில் 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதிலும் ஆடை விற்பனை மற்றும் எல்கட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை அதிகளவில் உள்ளது.
பெரு நகரங்கள்
இந்நிறுவனத்தின் இணைந்துள்ள விற்பனையாளர்களில் 60 சதவீதம் பேர் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை மற்றும் பெங்களுரூ பகுதிகளில் உள்ளனர், மீதமுள்ள 40 சதவீத விற்பனையாளர்கள் 2வது மற்றும் 3வது தர நகரங்களில் இருந்து வருகின்றனர்.
இலக்கு
2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் 2வது மற்றும் 3வது தர நகரங்களில் இருக்கும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பு செய்ய வேண்டும் என பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.
பயிற்சி
மேலும் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் இணைந்துள்ள விற்பனையாளர்களின் வர்த்தகத்தை அதிகரிக்க அவர்களுக்கு சில பயிற்சிகள் மற்றும் திட்ட வடிவங்களை அளிக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. மேலும் விநியோக பிரிவின் சேவையை துரிதப்படுத்த பல கட்ட திட்டங்களை தீட்டி வருகிறது பிளிப்கார்ட் நிர்வாகம்.
அன்கித் நகோரி
பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை தளத்தை பற்றி இந்நிறுவனத்தின் துணை தலைவரான அன்கித் நகோரி கூறுகையில்,"எங்கள் திட்ட வடிவத்தை (ஆன்லைன் சில்லறை வணிகம்) மக்கள் மிகவும் விரைவாக ஏற்றுக்கொண்டனர். இது எங்களது மிகப்பெரிய வெற்று என்றே கூறவேண்டும். மேலும் நிறுவன துவக்கத்தில் இருந்து நிறுவனத்தின் விற்பனையாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது." என தெரிவித்தார்.
பிளிப்கார்ட்
இந்நிறுவனம் தற்போது 70 பிரிவுகளில் 20 மில்லியன் வகையான பொருட்களில் விற்பனை செய்து வருகிறது, மேலும் இந்நிறுவனத்தின் விற்பனையிலும், விநியோகத்திலும் மக்கள் மத்தியில் அதிகளவிலான நம்பிக்கை உருவாகியுள்ளது.
பணியாளர்கள்
மேலும் இந்நிறுவனத்தில் 20,000 பேர் பணியாற்றுகின்றனர், இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் மிக்பெரிய கல்லூரிகளான ஐஐடி, மற்றும் ஐஐஎம் கல்லூரி மாணவர்கள் இந்நிறுவனத்தில் இணைய மிகவும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.
பிற விபரங்கள்
பிளிப்கார்ட் நிறுவனம் 26 மில்லியன் பதிவு வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளது, அதுமட்டும் அல்லாமல் தினமும் இந்நிறுவன தளத்திற்கு 8 மல்லியன் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். மேலும் ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications