புதிய நிறுவனங்களை வாங்க இன்போசிஸ் தயார்: விஷால் சிக்கா

பெங்களுரூ: இந்திய மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் நிறுவனங்களை கைபற்றவும், நிறுவனத்துடன் இணைந்திடவும் திட்டமிட்டுள்ளது.

பெங்களுரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்போசிஸ் நிறுவனம் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் புதுமையான சிந்தனைகள் கொண்ட புதியதாக துவங்கப்பட்ட நிறுவனங்களை கைபற்ற முடிவு செய்யதுள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

இந்நிறுவனத்திற்கு விஷால் சிக்கா தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட சில மாதங்களில் இந்நிறுவனம் பல மாற்றங்களுக்கு உள்ளானது, இதில் குறிப்பாக நிறுவன பணியாளர்களின் வாழ்வியல் முறை.

அதிரடியான பதில்

அதிரடியான பதில்

விஷால் சிக்கா பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செய்தியாளர் ஒரு இன்போசிஸ் நிறுவனமே விற்கும் நிலையில் இருக்கும்போது புதிய நிறுவனங்களை வாங்குவது சரியா என்ற கேள்விக்கு, சிக்கா அவர்கள், "நிறுவனம் புதிய சிந்தனையுடன் சிறப்பான வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது, இந்நிலையில் நிறுவனத்தை விற்கும் நிலையில் யாரும் இல்லை. அதுமட்டும் அல்லாமல் நான் இந்த நிறுவனத்தில் இருக்கும் வரை இத்தகைய நிலைக்கு நிறுவனத்தை கொண்டு செல்லமாட்டேன்" என்று ஆவேசமாக பதில் அளித்தார்.

புதிய நிறுவனங்கள்

புதிய நிறுவனங்கள்

மேலும் நிர்வாகம் புதிதாக துவங்கப்பட்ட நிறுவனங்களை மட்டுமே கைபற்ற திட்டமிட்டுள்ளது. பழைய நிறுவனங்களில் வருவாய் அதிகளவில் கிடைத்தாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய முயற்சிகளுக்கு பெரிதாக உதவாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி 2012

ஜனவரி 2012

இன்போசிஸ் நிறுவனம் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா பீபிஒ நிறுவனமான போர்ட்லேன்டு குரூப் நிறுவனத்தை 41 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கைபற்றியது.

அக்டோபர் 2012

அக்டோபர் 2012

அதே வருடத்தில் இந்நிறுவனம் சூரிச் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லோடுஸ்டோன் ஹோல்டிங் நிறுவனத்தை 219 மல்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இதன் பின் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்றத்தால் இந்நிறுவனம் புதிய நிறுவனங்களை கைபற்றும் திட்டங்களை கைவிட்டது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+