வங்கிகளுக்கான கடனில் 0.25% வட்டிக் குறைப்பு!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி தொகையில் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் மக்களுக்கு வங்கிகளில் இருந்து குறைவான வட்டித்தொகையில் கடன் கிடைக்கப்பெறும். மேலும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற அனைத்து கடன்களுக்கும் தவணைத் தொகை குறையும்.

 

ரிசர்வ் வங்கி நாட்டின் பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி வகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததால் வட்டி வகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக குறைந்துள்ளது.

வட்டி விகித குறைப்பு

வட்டி விகித குறைப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏற்று யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தனது வட்டி விகிதத்தை குறைந்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டித்தொகையில் 10 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக குறைந்துள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

இவ்வட்டி விகித குறைப்பை பற்றி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், "வட்டி விகிதம் நாங்கள் நினைத்தை விட மிகவும் வேகமாக குறைந்து வருகிறது" என தெரிவித்தார். மேலும் அவர் கடனுக்கான வட்டி குறைப்பை பற்றிய அறிவிப்புகள் இதுவரை வெளியிடவில்லை.

ஜனவரி 27
 

ஜனவரி 27

மேலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வட்டி விகித குறைப்பு பிப்ரவரி மாதமும், யூனியன் வங்கியின் வட்டி வகித குறைப்பு ஜனவரி 27ஆம் தேதியன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10.5 சதவீத சரிவு

10.5 சதவீத சரிவு

இந்திய வங்கி அமைப்பில் கடன் அளிப்பு விகிதம் டிசம்பர் 26ஆம் தேதியின் கணிப்பின்படி 10.5 சதவீதம் குறைந்துள்ளது, கடந்த வருடம் இது 14.5 சதவீதமாக குறைந்திருந்தது குறிப்பிடதக்கது. அதன் காரணமாகவே வங்கிகள் தங்களின் வட்டி விகதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது.

சரியான நேரம்

சரியான நேரம்

வங்கிகள் தொடர்ந்து வட்டி வகிதங்களை குறைத்து வரும் நிலையில் , இச்சந்தர்பதச்தை பயன்படுத்தி மக்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். மேலும் பிப்ரவரி மாத துவக்கம் வரை காத்திருந்து பிற வங்கிகளுக்கான வட்டி குறைப்பை கணித்து சிறந்த வங்கியை தேர்ந்தெடுக்கவும்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI rate cut: Now, your home & consumer loans to cost less

Your EMIs are set to ease a bit. Banks have begun lowering lending rates after the Reserve Bank of India on Thursday cut its key policy rate by a quarter percentage point. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X