மும்பை: இரண்டு வருடங்களுக்கு பிறகு, வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்துள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த வட்டி விகித குறைப்பால் ஏற்கனவே சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது, இவ்வருடத்தில் கடன் அளிப்பு விகிதம் கண்டிப்பாக உயரும் என வங்கி அதிகாரிகள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் நாட்டின் முதன்மையான சில வங்கிகள் வட்டி வகிதங்களில் மாற்றங்களை எற்படுத்த திட்டமிட்டுள்ளது. சரி, இத்தகைய வட்டி விகித குறைப்பு நமக்கு எந்த வகையில் நன்மை அளிக்கிறது என்பதை பார்க்கலாமா?
ஈ.எம்.ஐ
வீட்டு கடன் விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைந்தது என்றால், ரூ.50 லட்ச ரூபாய் கடன் தொகைக்கு, 20 வருட கால கட்டத்திற்கு, மாத தவணையில் ரூ.842/- குறையும்.
வட்டி விகிதம் மேலும் குறையும்
மார்ச் 2013-ல் நடந்த முதல் வட்டி குறைப்பிற்கு பிறகு, இன்னமும் கூட குறையலாம் என வங்கிகள் எதிர்ப்பார்க்கிறது. 2015-க்குள் வட்டி விகிதங்கள் 100 அடிப்படை புள்ளிகள் வரை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை அன்று, கடன் மற்றும் டெபாசிட் வீதங்களை ஏற்கனவே சில வங்கிகள் அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு லாபம்
வட்டி விகிதங்கள் குறைவதால் நிறுவனங்கள் வலுவடையும் (கடனுக்கான வட்டி விகதம் குறையும்). மேலும் வங்கிகளின் கடன்பத்திரத்தின் மதிப்பு உயர்வதால் வங்கிகளுக்கு லாபம் ஏற்படும்.
கார்ப்பரேட் கடன்கள்
கார்ப்பரேட் கடன்களுக்கும் இனி குறைவான வட்டியில் சுலபமாக கிடைக்கும். இதனால் கடன் வழங்கும் தொகையின் அளவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு அதிகரிக்கும்.
பங்குகள் மூலம் நிதி திரட்டலாம்
சந்தையில் முன்னேற்றம் இருப்பதால் நிறுவனங்கள் தங்களின் பங்குகள் மூலம் நிதி திரட்டலாம். மேலும் அரசாங்க முதலீட்டை விற்பதற்கான வாய்ப்புகளும் மேம்படும்.
பொருளாதார வளர்ச்சி
வாடிக்கையாளர்கள் அதிகமாக செலவழிப்பதாலும், கடன்கள் சுலபமாக கிடைப்பதாலும் (கார்ப்பரேட் மற்றும் கன்ஸ்யூமர் கடன்கள் உட்பட) நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுக்கும் என வங்கிகள் தெரிவிக்கிறது.
உலக வங்கி
நீண்ட கால விளைவுகளை பற்றி பார்க்கையில், 2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.14%-ஆக வளர்ச்சி அடையும் என உலக வங்கி எதிர்ப்பார்ப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் 2016 மற்றும் 2017-க்குள் அது சீனாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு இந்தியா வளரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.


Click it and Unblock the Notifications