டெல்லி: 2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஊக்குவிப்பை தவிர அதிகளவிலான வரி பயன்களை எதிர்பார்க்கலாம் என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகளை கவரவும் மத்திய அரசு பல வளர்ச்சி திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய சந்தையில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கும், புதிய நிறுவனங்களுக்கும் சாதகமான வகையில் வரி பயன்களை மத்திய அரசு வாரி வழங்கும் என கணிக்கப்படுகிறது. இதன் படி
நேரடி வரி விதிப்பு தள்ளுபடி
இந்தியாவில் புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்ததர நிறுவனங்களுக்கு முதல் 3 வருடங்களுக்கு நேரடி வரி தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அதிக மதிப்புடையை உலோகமான தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படலாம்.
பாதுகாப்பு துறை உற்பத்தி
இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை முழுமையாக தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டும் அல்லாமல் இத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் இத்தகைய சலுகை கிடைக்கப்பெறும்.
எலக்ட்ரானிக் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள்
இந்தியாவில் எலக்ட்ரானிக் மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் பொருட்களுக்கு குறைவான வரி விதிப்பு அளிக்கப்படுகிறது. ஆதாவது உதிரி பாகங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் எதும் இல்லாமல் முற்றிலும் நிறைவுற்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு குறைவான வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
காலணிகள்
மேலும் காலணிகளுக்கான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படும்.
பெட்ரோகெமிக்கல் பொருட்கள்
முழுமையான தயாரிப்பை முடிவடைந்த பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு அதிகப்படியான வரியும், மூலப்பொருட்களுக்கு குறைவான வரியை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஸ்டீல் பொருட்கள்
இத்துறையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு தாதுவிற்கு வரி விலக்கும், ஸ்டீல் பொருட்களுக்கு அதிகப்படியான வரியும் வதிக்கப்பட உள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.


Click it and Unblock the Notifications