கடுமையான செலவீன குறைப்பு திட்டத்துடன் ஏர்இந்தியா!! வருவாயில் 6.5% வளர்ச்சி...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்இந்தியா கடுமையான நிதிநெருக்கடியில் தவிப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஏர்இந்தியா டிசம்பர் மாதம் 14.6 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.

 

மேலும் வருவாயின் அளவை அதிகரிக்கவும், நஷ்டத்தின் அளவை குறைக்கவும் இந்நிறுவனம் செலவீன குறைப்பில் இறங்கியுள்ளது.

லாபத்தில் ஏர் இந்தியா

லாபத்தில் ஏர் இந்தியா

நீண்ட காலாமாக நஷ்டத்தில் செயல்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் டிசம்பர் மாதத்தில் மட்டும் 14.6 கோடி லாபம் பெற்றது. இக்காலக்கட்டத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்கு போக்குவரத்தும் சிறப்பாக இருந்தது குறிப்பிடதக்கது.

மொத்த வருவாய்

மொத்த வருவாய்

இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாத்தில் 6.5 சதவீதம் உயர்ந்து 2,070 கோடியாக உள்ளது. இது கடந்த வருடத்தில் இதேகாலகட்டத்தை ஒப்பிடுகையில் மொத்த வருவாய் 1,944 கோடியாக இருந்தது. இதன் மூலம் வருவாய் அளவு இரண்டு வருட உயர்வை எட்டியது.

பணியாளர்களுக்கு பாதிப்பு

பணியாளர்களுக்கு பாதிப்பு

இந்நிறுவனத்தின் செலவீண குறைப்பில் ஒரு பகுதியாக ஏர்இந்தியா நிறுவனம் பணியாளர்களுக்கு அளிக்கும் reimbursement சேவையின் ளவை 10சதவீதமாக குறைக்கவும், உலகில் நாடுகளில் ஏர்இந்தியாவின் செயல்படா அலுவலகங்களில் இருக்கும் பணியாளர்கள் மற்றும் பணியிடங்களை நீக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விமான சேவை
 

விமான சேவை

அதிக பயணிகளை கவர முடியாத காரணத்தால், லாபம் அளிக்காத வழித்தடங்களில் விமான சேவையை குறைக்க அல்லது முற்றிலும் நிறுத்திவிடவும் ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

5 நட்சத்திர ஹோட்டல்

5 நட்சத்திர ஹோட்டல்

இதுமட்டும் அல்லாமல் நீண்ட பயணங்களில் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அளிக்கப்படும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதிகளில் 10 சதவீத செலவைும் குறைக்க திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

இச்செலவீண குறைப்பு பற்றி ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில்,"இந்த இரண்டு கட்ட செலவீண குறைப்பு அனைத்தும் ஏர் இந்தியா நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்கவும், நிறுவனத்தை மீண்டும் லாபகரமான நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு முயற்சி" என ஏர் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2 மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனம் செலவீண குறைப்பில் ஈடுப்பட்டது குறிப்பிடதக்கது.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

வருவாய் உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்தது, பயணிகள் வருகையின் அதிகரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், எரிபொருள் விலை குறைப்பில் அதிக லாபம் அடைந்தது ஏர் இந்தியா.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India announces slew of cost-cutting measures

Air India has announced a series of cost-cutting measures which include plans to cut reimbursables by 10 per cent and abolition of posts from the non-operational areas.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X