அமுல் பேபியின் ரூ.5,000 கோடி முதலீட்டு திட்டம்!!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் தனது 50,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கை அடைய இந்நிறுவனம் 5,000 கோடி முதலீட்டில் அடுத்த ஒரு வருட காலத்தில் 10 பால் பதனிடும் ஆலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் இந்நிறுவனம் 20,000 கோடி ரூபாய் வருவாயை எட்ட உள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி தெரிவித்துள்ளார்.

10 ஆலைகள்

10 ஆலைகள்

5,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்படும் 10 ஆலைகளில், 2 டெல்லியிலும், 3 ஆலைகள் உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களிலும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் தலா ஒன்று அமைக்கப்பட உள்ளது.

20 20 டார்கெட்

20 20 டார்கெட்

இப்புதிய 10 ஆலைகள் மூலம் 2020ஆம் ஆண்டிற்குள் 50,000 கோடி வருவாய் இலக்கை அடைத்த திட்டமிட்டுள்ளதாக சோதி அவர்கள் இந்தியா புட் போரம் 2015 மாநாட்டில் தெரிவித்தார்.

அடுத்த தலைமுறை விவசாயிகள்

அடுத்த தலைமுறை விவசாயிகள்

அமுல் நிறுவனம் பால் உற்பத்தி, மாடுகளை பராமரிக்கும் முறையில் அதிகளவிலான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும் இந்தியாவின் ஊரக பகுதிகளில் அடுத்த தலைமுறைகள் கால்நடை வளர்ப்பு வணிகத்தில் தொடர்ந்து இருக்க திட்டங்கள் அமைக்க வேண்டும் எனவும் இம்மாநாட்டில் சோதி தெரிவித்தார்.

மாதம் 40,000 வருமானம்

மாதம் 40,000 வருமானம்

21இலட்ச முதலீட்டு திட்டத்தில் 15 இலட்சம் ரூபாய் வங்கி கடனுடன் 30 முதல் 40 பசு மற்றும் ஏறுமைகள் கொண்டு இருந்தால் மாதம் 40,000 ரூபாய் வரை வருமான ஈட்டலாம் என சோதி தெரிவித்தார்.

பால் உற்பத்தி

பால் உற்பத்தி

கடந்த 10 வருடத்தில் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் பல தனியார் நிறுவனங்கள் குதித்துள்ளது, சந்தையில் இத்துறையின் ஆதிக்கம் மட்டும் 20 சதவீதமாகும். மேலும் இந்தியாவில் இச்சந்தையின் மதிப்பு 4 இலட்சம் கோடி ரூபாய்.

 விளம்பரம்

விளம்பரம்

இந்நிறுவனம் விளம்பரத்திற்காக தனது வருவாயில் 1 சதவீதம் மட்டும் செலவு செய்து வருகிறது. ஆனால் இத்துறையில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் 8-15 சதவீதம் வரை செலவு செய்து வருகின்றனர்.

துவக்கம்

துவக்கம்

இந்நிறுவனம் 1946ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+