தள்ளுபடி கட்டணங்களால் விமான பயணிகளின் எண்ணிக்கை 10% உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வளர்ந்து வரும் நாடுகளில் விமான போக்குவரத்து சேவை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பயணிகள் விமான போக்குவரத்து சேவையில் மந்த நிலையே நிலவுகிறது. பயணிகள் விமான போக்குவரத்து சேவையில் இந்திய சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை கைபற்ற இந்நியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்துள்ளது.

 

2014ஆம் ஆண்டில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அளித்த அதிராடியான சலுகை மற்றும் தள்ளுபடியில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும் குறைவான காலகட்டத்தில் இத்துறை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

10 சதவீதம் உயர்வு

10 சதவீதம் உயர்வு

இந்த வருடம் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அளித்த சலுகை விலையில் 673.83 இலட்சம் பயணிகள் விமானத்தில் பறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகமாகும்.

614.26 இலட்சம் பயணிகள்

614.26 இலட்சம் பயணிகள்

விமான போக்குவரத்து இயக்குநரகம் அளித்த தகவலின் படி 2013ஆம் ஆண்டில் 614.26 இலட்சம் மக்கள் மட்டுமே விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள்

கடந்த ஒரு வருடத்தில் 673.83 இலட்சம் பயணிகளில் 18.4 சதவீதம் மக்கள், அரசு போக்குவரத்து விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவையை பயன்படுத்தியுள்ளனர். 81.6 சதவீத மக்கள் (549.58 இலட்சம் பயணிகள்) தனியார் நிறுவனங்களின் சேவையை நாடி சென்றுள்ளனர்.

இண்டிகோ
 

இண்டிகோ

தனியார் நிறுவனங்களில், இண்டிகோ நிறுவனம் 31.8 சதவீத சந்தையை கைபற்றி, 214.25 இலட்சம் பயணிகளுக்கு இந்நிறுவனம் தனது விமான சேவையை அளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

இண்டிகோ நிறுவனத்திற்கு அடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 21.37 சதவீத சந்தையை கைபற்றியுள்ளது. மேலும் இவ்வாண்டில் இந்நிறுவனம் 146.65 இலட்ச உள்நாட்டு விமான பயணிகளை கவர்ந்துள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Domestic air traffic grows 10 % in 2014

Driven by a slew of discounted ticket schemes, 673.83 lakh passengers were flown by domestic airlines last calendar year, a growth of 9.7 per cent over 2013.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X