டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகிற 24ஆம் தேதியன்று நான்கு நாள் பயணமாக இந்தியா வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவில் அலகாபாத், அஜ்மீர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கும் பணியில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அமெரிக்காவின் பதிவு ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது.
மோடியின் அமெரிக்க பயணம்
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் இந்தியாவில் 3 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் பயணியில் அமெரிக்கா உதவி செய்வதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ஒபாமாவின் இந்திய பயணத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியில் அமைக்கும் பணியில் அமெரிக்காவின் சிஸ்கோ, ஐபிஎம், 3எம், ஈஎம்சி, ஜிஈ, ஹனிவெல், KPMG, ஓடிஸ், டிம்கென் மற்றும் லூயிஸ் பெர்ஜர் போன்ற பலநிறுவனங்கள் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது.
உள்கட்டமைப்பு களப்பு தளம்
மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உள்கட்டமைப்பு களப்பு தளம் அமைக்கப்பட்டது. இத்தளத்தை அமெரிக்க வர்த்தக துறை, நிதி அமைச்சகம் மற்றும் அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் இந்தியா உதவி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
100 ஸ்மார்ட் சிட்டி
இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவதற்கு 2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்கான பணியில் ஜாப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது இப்பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.


Click it and Unblock the Notifications