9% வளர்ச்சியில் விப்ரோ!! பணியாளர்கள் எண்ணிக்கை உயர்வு...

பெங்களுரூ: விப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவனம் வெளியிட்டது. இதன் எதிரொலியாக திங்கட்கிழமை பங்கு வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7.7 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஜூலை 2013ஆம் ஆண்டு முதல் இதுவே அதிகப்படியான உயர்வு என்பது குறிப்பிடதக்கது.

இந்நிறுவனத்தின் முன்றாம் காலாண்டு முடிவுகளின் நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 2,190 கோடியாக உள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 11,990 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

வருவாய்

வருவாய்

விப்ரோ நிறுவனத்தின் அக்டோபர் - டிசம்பர் மாத காலகட்டத்தின் மொத்த வருவாய் டாலர் மதிப்பில் 1.3 சதவீத அளவு உயர்ந்து 1,795.4 மில்லியன் டாலராக உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

4வது காலாண்டு வருவாய்

4வது காலாண்டு வருவாய்

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி 2015ஆம் நிதியாண்டில் 13-15 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விப்ரோ நிறுவனத்தின் 4வது காலாண்டு வருவாய் 1,808 மில்லியன் டாலருக்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் வெளியேற்றம்

பணியாளர்கள் வெளியேற்றம்

கடந்த 6 மாத காலமாக இத்துறையில் பணியாளர்கள் வெளியேற்றம் அதிகமாக உள்ளது. விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றத்தின் அளவு 16.5 சதவீதமாக உள்ளது. இந்த அளவி இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் குறைவானதாகும்.

பணியாளர்கள் எண்ணிக்கை

பணியாளர்கள் எண்ணிக்கை

விப்ரோ நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை டிசம்பர் 31ஆம் தேதியின் படி 1,56,866 பேர் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் 44 புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

உலக நாடுகளில் விப்ரோவின் வளர்ச்சி

உலக நாடுகளில் விப்ரோவின் வளர்ச்சி

இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் செயல்பட்டு வருகிறுது ஐரோப்பாவில் இந்நிறுவனம் 0.6% வளர்ச்சியும், வட அமெரிக்கா 2.0% வளர்ச்சியும் பெற்றுள்ளது. எனினும், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவாய் அளவு 5.7% உயர்ந்துள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+