மும்பை: புதன்கிழமை சந்தை துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தை உயர்வை சந்தித்தது. இதன் படி வர்த்தகம் துவக்கி ஒரு மணிநேரத்தில் மும்பை பங்குச் சந்தை 28,900 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதுமட்டும் அல்லாமல் நிப்டியும் 8,730 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டு எட்டிய நிலையில், இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியா சந்தையில் அதிகளவிலான முதலீட்டை செய்து வருகிறது, மேலும் புதிய பட்ஜெட்டை எதிர்நோக்கி அனைத்து துறைகளின் வர்த்தகமும் சிறப்பாக உள்ளது இதுவே இத்தகைய உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தொடர் உயர்வு
கடந்த ஐந்து நாட்களாக மும்பை பங்கு சந்தை உயர்வுடனே காணப்படுகிறது, இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணியளவில் 80 புள்ளிகள் உயர்ந்து 28,865 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிப்டியில் 14.75 புள்ளிகள் உயர்ந்து 8,711.55 புள்ளிகளை எட்டியுள்ளது.
முக்கிய துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, கட்டுமானம் மற்றும் மூலதன சந்தைகளின் வர்த்தகம் 1.03 சதவீதம் உயர்ந்து உள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததால் வங்கிகளின் வர்த்தகம் அதிகரித்துள்ளது இதன் எதிரோலியே பங்கு சந்தையில் வெளிப்படுகிறது.
டாப் நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, எல்& டி, மாருதி சுசுகி, எம் & எம், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சி
மேலும் 2015ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தின் அளவு சீனாவை பின்னுக்கு தள்ளும் என்று சில ஆய்வு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லமல் சீனாவின் வளர்ச்சி விகிதம் 24 வருட சரிவை தழுவியுள்ளது. இதன் காரணமாகவும் இந்திய சந்தையில் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
| Stock | Share price on 21 Aug 2017 (Rs) | Share price on 21 Aug 2018 (Rs) | Absolute returns (Rs) | % increase |
|---|---|---|---|---|
| Intellect Design Arena | 108.50 | 247.00 | 138.5 | 127.65% |
| Infinite Computer Solutions | 200.49 | 467.00 | 266.51 | 132.93% |
| KPIT Technologies | 110.90 | 290.60 | 179.7 | 162.04% |
| L&T Technology Services | 745.20 | 1564.95 | 819.75 | 110.00% |
| MindTree | 461.40 | 1043.50 | 582.1 | 126.16% |
| NIIT Tech | 483.55 | 1344.00 | 860.45 | 177.94% |
| Sasken Tech | 450.25 | 956.75 | 506.5 | 112.49% |
| Sonata Software | 154.65 | 362.50 | 207.85 | 134.40% |
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications