மும்பை: ஆசிய சந்தைகளில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளதால், மும்பை பங்குச்சந்தை இன்று காலை முதலே உயர துவங்கியது. இதன் மூலம் வர்த்தகம் துவங்கி 18 நிமிடங்களிலேயே மும்பை பங்கு சந்தை 29,000 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்தது.
மேலும் பட்ஜெட் அறிவிப்பு மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே நடக்கும் ஒப்பந்தங்களின் எதிரோலியாக இந்திய சந்தையில் வர்த்தகம் கடந்த ஒரு வாரமாக உயர்ந்த வண்ணமே உள்ளது.
156 புள்ளிகள் உயர்வு
மேலும் மும்பை பங்கு சந்தை தற்போது 156.00 புள்ளிகள் உயர்ந்து 29,041 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிப்ஃடியும் 30.20 புள்ளிகள் உயர்ந்து 8759.70 புள்ளிகளை எட்டியுள்ளது.
லாபம் அடைந்து வரும் நிறுவனங்கள்
இன்று காலை வர்த்தகத்தில் குஜராத் மாநில் உரம் மற்றும் கெமிக்கல் நிறுவனம், யுனைடெட் ப்ரூவரிஸ்,எல் & டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், போலாரிஸ் ஆகிய நிறுவனம் லாபம் அடைந்து வரும் நிறுவனங்களின் பட்டியலில் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
பங்கு சந்தை வெளியிட்ட அறிக்கையின் படி ஜனவரி 21ஆம் தேதி நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா சந்தையில் 2065.49 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
ஐரோப்பிய சந்தை
உலக சந்தைகளில், தற்போது ஆசிய சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர், இதேபோல் ஐரோப்பிய சென்டரல் பாங்க் பத்திர கொள்முதல் திட்டத்தையும், தங்கம் மீதான முதலீட்டை அதிகரிக்க உள்ளது, இது ஆசிய சந்தைக்கு மிகவும் சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க சந்தை
ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அதிகளவிலான வளர்ச்சியை கண்டு வரும் இந்நிலையில், அமெரிக்க சந்தை மிதமான உயர்வையே கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications