கடன் திட்டங்கள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வங்கிகளுக்கு உத்தரவு!!
மும்பை: வங்கி கடன் சேவைகளை வெளிப்படையாக்க ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளையும் கடன் திட்டங்களுக்கான வட்டி வகிதம் மற்றும் செயல்பாடு கட்டணங்கள் என அனைத்து விபரங்களையும் வங்கி இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து வங்கிகளையும் இதற்கான பணிகளை உடனடியாக துவங்கவும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வங்கியின் இணையத்தளங்களிலும் இத்தகவல்கள் கிடைக்க பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தற்போது அனைத்து வங்கிகளிலும் பல விதமான கடன்திட்டங்கள் உள்ளதால், வங்கிளில் செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களின் விபரங்கள், அதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களையும் குறிப்பிட ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் எளியமுறையில் கடன் திட்டங்களை சேர்ந்தெடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.


Click it and Unblock the Notifications