மும்பை: முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் பதவிக் காலத்தில் மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 323 அதிவேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக பெற்று, அதை சன் டிவி நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் நேற்று தயாநிதி மாறனின் பி.எ மற்றும் சன் டிவி நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களுகம் கைது செய்யப்பட்டனர்.
சன் டிவி அதிகாரிகளின் கைது நடவடிக்கையின் மூலம் பங்குச் சந்சையில் இந்நிறுவனத்தின் பங்குகள், நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 5 சதவீத சரிந்தது குறிப்பிடதக்கது.

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் சன் டிவி நிறுவன பங்குகள் 1.02 சதவீத உயர்வுடன் துவங்கினாலும் அடுத்த சில நிமிடங்களில் சரிவை சந்தித்தது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு இந்நிறுவனத்தின் பங்குகளில் சரிவை எதிர்பார்க்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.
10.00 மணியளவில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 0.68 சதவீதம் உயர்ந்து 394.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய நாளில் பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்ககுகள் 407.90 என்ற அதிகப்படியான விலையும், 384.75 என்ற குறைவான நிலையை அடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
கடந்த 52 வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 488 ருபாய் என்ற மிக உயரிய நிலையைும், 298.55 என்ற குறைவான நிலையும் அடைந்ததுள்ளது.


Click it and Unblock the Notifications