மும்பை: நிதிநெருக்கடி மற்றும் விற்பனையில் மந்த நிலையை தழுவிய விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் லாபத்தில் 21.58 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
2014ஆம் நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்ததால் இந்நிறுவனம் 78.81 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலாகட்டத்தில் இந்நிறுவனம் 64.82 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்றது.

மேலும் நிறுவனத்தின் மொத்த விற்பனையின் அளவு 2,287.89 கோடியாக உயர்ந்துள்ளதாக மும்பை பங்குச்சந்தைக்கு இந்நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் மதுபான வகைகளான சிக்னேச்சர், பேக்பைபர், ஆண்டிக்குட்டி, ராயல் சேலஞ்ச் மற்றும் பிரஸ்டிஜ் போன்ற பிராண்டு மதுபானங்கள் அதிகளவில் விற்பனை நடைப்பெற்றதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications