டெல்லி: இந்தியாவில் நிலவும் பணவீக்க அளவை குறைக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பல நடவடிகைகள் எடுத்துள்ளது இதன் காரணமாகவும் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் காரணமாக இந்திய சந்தையில் ஜனவரி மாத்தில் மட்டும் சுமார் 21,000 கோடி ரூபாய் பணத்தை அன்னிய முதலீட்டாளரகள் முதலீடு செய்துள்ளனர்.
ஜனவரி 23ஆம் தேதி வரையில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 5,992 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்யுள்ளனர். அதேபோல் கடன் சந்தையில் 15,336 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். மொத்தம் 21,328 கோடி ரூபாயாகும்.

நாட்டின் குறைவான பணவீக்கத்தை எதிர்நோக்கி அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்தியா சந்தையில் செய்து வருகின்றனர். இதேபோல் ரிசர்வ் வங்கியின் 0.25 சதவீத வட்டிக்குறைப்பு சந்தையின் முதலீட்டு அளவை புதிய உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் ஐரோப்பிய சென்டர்ல் வங்கியின் 100 பில்லியன் யூரோ முதலீட்டு திட்டம் இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
2014ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன் சந்தையில் மொத்தம் 1.16 இலட்சம் கோடி ரூபாயும், பங்குச் சந்தையில் 98,150 கோடி ரூபாயும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications