பூண்டு விலை உயருது… குண்டு மிளகாய் சரியுது

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அன்றாட சமையலில் மக்கள் அதிகம் உபயோகிக்கும் மிளகாய், பூண்டு, ஆகியவற்றின் விலை சமீபகாலங்களில் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.

வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றி ஆள் ஆளாக்கு அள்ளிவிடவே, வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தினசரி சமையலில் பூண்டு முக்கிய இடம் பிடித்து விட்டது. தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாத காரணத்தால் பூண்டுவிலை விர்ர்தான்.

சீனா பூண்டு

சீனா பூண்டு

கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சீனப்பூண்டு. தற்போது அது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ( ஒபாமா இந்தியா வந்ததால் சீனா பூண்டு விலை ஏறிவிட்டதோ என்னவோ?)

நாட்டு பூண்டு

நாட்டு பூண்டு

இதுபோல, 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல் ரக நாட்டுப்பூண்டு, 110 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டாம் ரக நாட்டுப்பூண்டு 80 ரூபாய்க்கும் விலை ஏறுமுகம் கண்டுள்ளது.

வரத்து குறைவு

வரத்து குறைவு

பூண்டு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரும் காலத்தில் பூண்டு வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

குண்டு மிளகாய்
 

குண்டு மிளகாய்

அதே சமயம் தமிழகத்தில் குண்டு மிளகாய் விலை கிலோவுக்கு 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முதல் ரக குண்டு மிளகாய் 170 ரூபாயாக இருந்தது. இப்போது அது 140 ரூபாயாக குறைந்துள்ளது.

விளைச்சல் அதிகம்

விளைச்சல் அதிகம்

140 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டாவது ரக குண்டு மிளகாய், தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விளாத்திகுளம், பரமக்குடி ஆகிய இடங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது.

விளைச்சல் அதிகம்

விளைச்சல் அதிகம்

140 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டாவது ரக குண்டு மிளகாய், தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விளாத்திகுளம், பரமக்குடி ஆகிய இடங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது.

நீள மிளகாய் உயர்வு

நீள மிளகாய் உயர்வு

அதேநேரத்தில், நீட்டு மிளகாய் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், 90 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நீட்டு மிளகாய் 105 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Garlic prices touch Rs 150 a kilo

After onion, the other most extensively used ingredient in winter cooking, garlic, too has become an almost buy-me-not at Rs 150per kg.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X