துபாய்: பல ஆண்டுகளாக உலகின் மிகவும் பிசியான விமான நிலையமாக கருதப்பட்ட லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி துபாய் சர்வதேச விமான நிலையம் முன்னேறியுள்ளது.
நீண்ட தூரம் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் ஜெர்மனி மற்றும் லண்டன் விமான நிலையத்தையே இடைநிறுத்தம் அல்லது விமான மாற்றத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.
துபாய் விமான நிலையம்
இதனிடையே கடந்த 10 வருடங்களில் துபாய் விமான நிலையம், விமான போக்குவரத்து சேவை, கட்டமைப்பு, மற்றும் பிற சேவைகளின் தரத்திலும் மேம்பட்டு வருவதாலும், எரிபொருள் விலை மலிவாக கிடைப்பதாலும் விமான நிறுவனங்கள் துபாய் விமான நிலையத்தை இடைநிறுத்தமாக பயன்படுத்த துவங்கினர்.
பன்னாட்டு விமான பயணிகள்
இதன் மூலம் துபாய் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
69.9 மில்லியன் பயணிகள்
கடந்த ஒரு வருடத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை 69.9 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இதே காலகட்டத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை 68.1 மில்லயன் பயணிகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
விரிவாக்கம்
மேலும் துபாய் சர்வதேச விமான நிலையைத்தை விரிவாக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் பல ஆயிரம் கோடி செலவில் விரிவாக்க பணிகள் துவங்கியுள்ளது. விரிவாக்க பணிகள் முடிவடைந்த உடன் உலகிலேயே மிகபெரிய விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உருவெடுக்கும்.
விமான நிறுவனங்கள்
துபாய் விமான நிலையத்தை தலைமையாக கொண்டு எமிரேட்ஸ், எதிஹாத், கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் இந்த முன்று நிறுவனங்களும், துபாயில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு செல்லும் பணிகளை அதிகளவில் கவர்வதாகவும் கருத்து நிலவுகிறது.
டாப் 10
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.


Click it and Unblock the Notifications