ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் "சூப்பர் சேல்" ஆஃபர்!! 1,499 ரூபாய் சலுகை கட்டணம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமைகள் அனைத்தும் சன் நெட்வொர்க், கலாநிதி மாறனிடம் இருந்து இந்நிறுனத்தின் நிறுவனரான அஜய் சிங்கிற்கு கைமாறியதை தொடர்ந்து இந்நிறுவனம் மீண்டும் மிகப்பெரிய சலுகை விலை திட்டத்தை அறிவித்துள்ளது.

 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் புதன்கிழமை காலையில் "சூப்பர் சேல்" என்ற பெயரில் 5 லட்சம் டிக்கெட்களை 1,499 ரூபாய் என்ற சலுகை விலையில் வாடிக்கையாளருக்கு அளிக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

இந்த சலுகை விலையில் டிக்கெட் விற்பனை ஜனவரி 28ஆம் தேதி முதல் ஜனவர் 30ஆம் தேதி வரையில் இந்நிறுவனம் நடத்த உள்ளது. மேலும் இப்பயணத்தை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் வாடிக்கையாளர் திட்டமிட்டுக்கொள்ளலாம். மேலும் இந்த சலுகை இந்நிறுவனத்தின் உள்நாட்டு சேவை அனைத்திற்கும் பொறுத்தும்.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இத்தகைய சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் பயனளிப்பதாக இருந்தாலும், நிறுவனத்திற்கு இதில் சில சாதகமான வாய்ப்புகள் உள்ளது. மேலும் சலுகை விலையில் டிக்கெட் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் விரைவில் தங்களது பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைமை வர்த்தக அதிகாரி
 

தலைமை வர்த்தக அதிகாரி

இச்சலுகை விலை திட்டத்தை குறித்து இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான கனிஸ்வரன் அவிலி கூறுகையில், " இக்கட்டண சலுகை திட்டத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அடுத்த 5 மாதங்களுக்கு தங்களின் பயணங்களை திட்டமிட்டு சிறப்பான முறையில் பணத்தை சேமித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சிறப்பான சேவையை பெற முடியும் " என தெரிவித்தார்.

சஞ்சீவ் கபூர்

சஞ்சீவ் கபூர்

மேலும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சீவ் கபூர் கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களும் பொறுமை காத்ததற்கு நாங்கள் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் சந்தையில் இழந்த இடத்தை பிடிக்க இச்சலுகை திட்டம் மிகப்பெரிய அளவில் உதவும்" என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet does it again, puts 5 lakh seats on sale

The budget carrier which is in the process of ownership change on Wednesday announced a 'Super Sale' putting 5,00,000 ( half a million) seats for sale at an all inclusive one way advance booking fares starting Rs. 1,499 all-in.
Story first published: Wednesday, January 28, 2015, 13:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X