டெல்லி: 2014ஆம் நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 35 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளனர், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த அளவு 26 சதவீதம் அதிகம் என குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அறிக்கையில் யுனைடெட் நேஷன்ஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உலக பொருளாதாரம், நிலையற்ற கொள்கை மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனைகள் போன்ற காரணத்தால் உலக நாடுகளின் அன்னிய முதலீட்டின் அளவு கடந்த வருடத்தை விட 8 சதவீதம் குறைந்து 1.26 டிரில்லியனாக குறைந்துள்ளது.
இந்தியா
உலக பொருளாதாரத்தின் இத்தகைய நிலையற்ற தன்மையிலும் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 26 சதவீதம் அதிகரித்துள்ளது இந்திய சந்தையின் வளர்ச்சி மிகுந்த பாதையை காட்டுகிறது.
சீனா
மேலும் உலக நாடுகளில் அதிகளவிலான அன்னிய முதலீட்டை பெற்றிருப்பது சீனா தான். 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 128 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று பட்டியலில் முதல் இடத்தை இவ்வருடமும் தக்க வைத்துள்ளது.
அமெரிக்கா
2013ஆம் வருடத்தை போலவே இவ்வாண்டும் அமெரிக்கா 86 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்றும் முன்றாம் இடத்திலேயே உள்ளது.
டாப் 5
மேலும் இப்பட்டியலில் டாப் 5 இடங்களில் இருக்கும் நாடுகளில் 3 வளரும் நாடுகள் உள்ளது. அவை ஹாங்காங் (111 பில்லியன் டாலர்), சிங்கப்பூர் (81 பில்லியன் டாலர்), பிரேசில் (62 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications