டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவனத்தை கையகப்படுத்த ஓலாகேப்ஸ் முயற்சி!! ரூ.1,250 கோடி டீல்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: பன்னாட்டு ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க ஓலாகேப்ஸ் நிறுவனம் தனது சக போட்டி நிறுவனமான டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவனத்தை 1,250 கோடி ரூபாய்க்கு (200 மில்லியன் டாலர்) கையகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஓலாகேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் பன்னாட்டு டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க இந்தியா நிறுவனமான ஓலாகேப்ஸ் தன் பக்கம் வலிமைப்படுத்த டாக்ஸி-பார்ஸ்யூர் கைபற்ற திட்டமிட்டுள்ளது. இக்கூட்டணியில் ஜப்பான் நிறுவனமான சாப்ட்பாங்க் நிறுவனமும் இணைகிறது.

ஓலாகேப்ஸ்

ஓலாகேப்ஸ்

ஒலாகேப்ஸ் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமாக இருக்கும் ஜாப்பான் சாப்ட்பாங்க் நிறுவனம், டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவனத்தை கைபற்றுவதில் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் சாப்ட்பாங்க் நிறுவனம் பிளிப்கார்ட்- மின்திரா டீலில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடதக்கது.

10 நாட்கள்

10 நாட்கள்

மேலும் அடுத்த 10 நாட்களில் இரு நிறுவனங்களின் ஒப்பந்தை நிலையை பற்றி முழுமையான முடிவுகள் வெளிவரும். மேலும் இரு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

விலை குறைப்பு

விலை குறைப்பு

அடுத்த 10 நாட்களுக்குள் ஆன்லைன் டாக்ஸி மார்கெட்டில் விலை குறைப்பு பற்றி அனைத்து நிறுவனஙகளிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் டாக்ஸி விலை நிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா
 

இந்தியா

ஓலாகேப்ஸ்- டாக்ஸி-பார்ஸ்யூர் நிறுவனங்களை இணையும் பட்சத்தில் இந்தியா ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஒரு புதிய புரட்சி உண்டாகும் என அமெரிக்காவின் டெம்பில் யுனிவர்சிட்டி என்னும் மேலான்மை கல்லூரியின் பேராசிரியர் சுனில் வாட்டால் தெரிவித்தார்.

உபர்

உபர்

மேலும் தலைநகர் டெல்லியில் ஆன்லைன் டாக்ஸி சேவை துவங்குவதற்காக உபர் நிறுவனம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Olacabs to buy TaxiForSure.. deal likely at Rs 1,250 cr

Olacabs is on the verge of buying rival Taxi-ForSure for about $200 million (Rs 1,250 crore), an aggressive move which sets up a straight fight with Uber for dominance of India's taxi aggregation market.
Story first published: Thursday, January 29, 2015, 13:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X