டெல்லி: நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை அனைத்தும் இந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் கையில் இருந்து இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங்கிற்கு மாற்ற ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அஜய் சிங்
புதிய முதலீட்டாளர்களுடன் கடந்த ஒரு மாதமாக இந்நிறுவனத்தை நடத்திவரும் அஜய்சிங்கிற்கு நிறுவனத்தின் அனைத்து விதமான உரிமைகளும் அதிகராபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
பங்கு விற்பனை மற்றும் கொள்முதல் பத்திரத்தில் அஜய் சிங் மற்றும் கலாநிதி மாறன் தரப்பும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
சன் குரூப்
கலாநிதி மாறனின் சன் குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கே.ஏ.எல் ஏர்வேஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தன்வசம் இருந்த 58.46 சதவீத பங்குகளையும் அஜய் சிங்கிற்கு விற்றுள்ளது. இதன் பின் கலாநிதி மாறன் நிறுவனத்தின் 86 கோடி ரூபாய் முதலீடு செய்து நிறுவனத்தின் 10ச சதவீத பங்குகளை மட்டும் பெற்றுக்கொள்ளகிறார்.
விலகல்
இதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து கலாநிதி மாறன், காவேரி மாறன் மற்றும் எஸ். நட்ராஜன் ஆகியோர் நிர்வாக குழுவில் இருந்து விலகிக் கொண்டனர்.
முதலீடு அதிகரிப்பு
மேலும் இந்நிறுவனத்தின் முதலீட்டு அளவு தற்போது 2,000 கோடி ரூபாயாக உள்ளது. இதன் அளவை மேலும் 1500 கோடி வரை அதிகரிக்க ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தலைமை அலுவலகம்
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை தலைமை அலுவலகம் சென்னையில் இருந்து செயல்பட்டது. தற்போது தலைமை அலுவலகத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications