சென்னை: வரி சேமிக்கும் வங்கி ஃபிக்சட் டெபாசிட்கள், வருமான வரித்துறை சட்டப்படி பிரிவு 80C-யின் கீழ், வரி சலுகைகளை அளிக்கிறது என்பது வருமான வரி செலுத்தும் அனைவருமக்கும் தெரிந்த ஒன்று.
அட அண்ணாச்சி உங்களுக்கு தெரியாத?? கவலைய விடுங்க நாங்க விபரமா சொல்றோம்...
வருமான வரி
உங்களிடம் வருமான வரி கட்ட வேண்டிய வருவாய் இருந்தால், அவைகளை இந்த டெபாசிட்களில் முதலீடு செய்வதன் மூலம் வரி பணத்தை மிச்சப்படுத்தலாம். இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து மக்கள் மத்தியில் இந்த டெபாசிட்கள் மிகுந்த வரவேற்பை அடைந்துள்ளது. விருப்பத்தக்க வரி சேமிப்பு முறைகளில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.
சரி இவ்வகையான ஃபிக்சட் டெபாசிட்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள், இதோ!
வரி சேமிப்பு வங்கி ஃபிக்சட் டெபாசிட்
நீங்கள் வரி சேமிப்பு வங்கி ஃபிக்சட் டெபாசிட்டில் கூட்டாக முதலீடு செய்திருந்தால், இரண்டு கூட்டு உடைமையாளர்களுக்கும் வரிச்சலுகை கிடைக்காது. அப்படியானால் முதல் உடைமையாளருக்கு மட்டுமே இந்த சலுகை கிட்டும்.
சான்றிதழை சரிப்பார்க்கவும்
முதலீடு செய்யும் முன் அது வரி சேமிப்பிற்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டமா என்பதை சான்றிதழலில் சரிப்பார்த்து, உறுதி செய்து கொள்ளவும். சில நேரம், வங்கி செய்துள்ள பிழையால் அது சாதாரண ஃபிக்சட் டெபாசிட்டாக கருதப்பட்டிருக்கும். அதனால் சான்றிதழை பெரும் போது அதனை ஒரு முறைக்கு இரண்டு முறை சரிப்பார்த்துக் கொள்ளவும்.
என்.எஸ்.சி திட்டம்
இத்திட்டத்திற்கு என்.எஸ்.சி.-க்கு கிடைப்பதை போன்ற வரிச் சலுகைகள் கிடையாது. இது வரியே முற்றிலும் அல்லாத சேமிப்பு முறை என தான் பலரும் நினைக்கிறார்கள். வருமான வரித்துறை சட்டப்படி பிரிவு 80C-யின் கீழ் வரிச்சலுகைகளை பெரும் போது, நீங்கள் சம்பாதிக்கும் வட்டி தொகைக்கு வரி வசூலிக்கப்படும். வரி கட்டுவதற்காக, அந்த வட்டி தொகையை வருமான வரியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டோ ஸ்வீப் வசதி கிடையாது
ஆட்டோ ஸ்வீப் செய்வதற்கு இந்த கணக்கை சேமிப்பு கணக்குடன் இணைக்க முடியாது. அதனால் நீங்கள் காசோலை வழங்கினால், வங்கி உங்கள் ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து ஆட்டோ-ஸ்வீப் செய்து, மீண்டும் சேமிப்பு கணக்கில் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்க்காதீர்கள்.
5 வருடங்கள்
அவசர சூழ்நிலைகளிலும் கூட, 5 வருட கால கட்டத்திற்கு உங்களால் பணத்தை கணக்கில் இருந்து எடுக்க முடியாது. முதல் உடைமையாளர் மரணிக்கும் போதே உங்களால் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
உதாரணம்
மேலும் இத்திட்டத்தின் கிழ் ஹெச்.டி.எஃப்.சி வங்கி அளிக்கும் டெப்பாசிட் திட்டத்தை பற்றி அறிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications