மும்பை: மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை ஒ.எஃப்.எஸ் முறையில் வெற்றிகரமாக விற்பனை செய்து 22,557.63 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களின் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இது கருதப்படுகிறது.
மேலும் இந்த 10 சதவீத பங்கு விற்பனையில் 5 சதவீத பங்குகளுக்கான நிதி மத்திய அரசிற்கு செல்ல உள்ளது.

ஒ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்யப்பட்ட 63.16 கோடி பங்குகளுக்கு, 67.5 கோடி பங்குகளுக்கான விலை விண்ணப்பம் வந்துள்ளது குறிப்பிடதக்கது.
கோல் இந்தியாவின் இந்த பங்கு விற்பனையில் அதிகப்படியான அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். மொத்த பங்கு எண்ணிக்கையில் 20 சதவீத பங்குகள் ரீடைல் இன்வெஸ்டார்ஸ் ஒதுக்கப்பட்டது. இவர்கள் 2 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
ரீடைல் இன்வெஸ்டார்ஸ் மூலம் இந்த பங்கு விற்பனையில் 1852.22 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications