மோடியின் "சுகன்யா சம்ரித்தி" திட்டம்!! பெண் குழந்தைகளுக்கு இது ஒரு ஜாக்பாட்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மத்திய அரசு இந்தியாவில் பெண் குழந்தைகளை போற்றும் வகையிலும், அவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தியும் 10 வயது குறைவான பெண் குழந்தைகளுக்காக "சுகன்யா சம்ரித்தி" என்னும் புதிய டெப்பாசிட் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

மேலும் இத்திட்டம் பிரதமர் மோடி துவக்கிய "பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். சரி இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்போம்.

மோடியின்

சுகன்யா சம்ரித்தி

* மத்திய அரசு அறிவித்திருக்கும் இத்திட்டத்தின் படி பெண் குழந்தை பிறந்த நாள் முதல் 10 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் திறந்துக்கொள்ளலாம்.

* வருடத்திற்கு 1,000 ரூபாய் வைப்பு தொகையாக இக்கணக்கில் வைக்க வேண்டும், இல்லையெனில் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

* இக்கணக்கை பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொண்டு தபால் நிலையம் மற்றும் எந்தொரு தேசிய வங்கிக் கிளையிலும் கணக்கை திறந்துக்கொள்ளலாம்.

* பெண் குழந்தை 10 வயது எட்டிய பின்னர் இக்கணக்கை, இக்குழந்தை தானாக பயன்படுத்தக்கூடிய தகுதி பெறும்.

* மேலும் இக்கணக்கு வங்கி அல்லது தபால் நிலையத்தில் திறந்த நாள் முதல் 21 வருடத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். மேலும் பெண் குழந்தையின் வயது 18 நிரம்பிய பின் திருமணத்தை எட்டும் நிலையில் கணக்கு முடிவுறும்.

மோடியின்

சரி பணத்தை எப்போது எடுக்க முடியும்...

* பெண் குழந்தையின் உயர் கல்விக்கு உதவும் வகையில், இக்குழந்தை 18 வயது நிறப்பிய பின் வைப்பு தொகையில் 50 சதவீத தொகையை எடுக்கு முடியும்.

* இதற்குமுன் இக்கணக்கில் இருந்து சிறு தொகைக்கூட எடுக்க முடியாது. இதன் மூலம் பெண் குழந்தைகளின் விரைவு திருமணத்தை தடுக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது.

 

வைப்பு தொகைக்கு வட்டி விகிதம்

* இக்கணக்கில் இருக்கு் வைப்பு தொகைக்கு வருடத்திற்கு 9.1 சதவீதம் என்ற அளவில் விதிக்கப்படும்.

மேலும் வட்டித் தொகை இக்கணக்கில் காம்பவுன்ட் முறையில் சேர்க்கப்படும்.

* மேலும் ஒவ்வொரு வருடத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவிக்கும்.

மோடியின்

வரி சலுகை

* மேலும் இக்கணக்கில் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் வரை வைப்பு தொகையாக முதலீடு செய்லாம்.

* மேலும் இத்திட்டம் வருமான வரி சட்டம் 80சி கிழ் அனைத்து விதமான வரி சலுகையுடன் செயல்படும்.

மத்திய அரசு

மத்திய அரசின் இத்திட்டம் மிகவும் சிறப்பான முயற்சி, இத்திட்டை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் உயர் கல்வி கிடைக்க வாய்ப்புள்ளது.

முடிவுரை

இத்திட்டத்தை முதலீடு என்ற வகையில் பார்த்தால், வங்கி வைப்பு நிதிகளை (8.75 சதவீதம் வட்டி) ஒப்பிடுகையில் சிறப்பான முதலீட்டு திட்டம் தான். மேலும் இதற்கு வரி சலுகையும் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sukanya Samriddi Account for Minor Girl Child with 9.1 per cent Interest

The government has been increasingly giving emphasis to the girl child and education for her. In line with the same the Government recently launched a new deposit scheme called Sukanya Samriddhi Account only for minor girl child in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X