பெட்ரோல், டீசலை விட விமான எரிபொருள் விலை குறைவு!!

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது. ஆனால் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் சுத்திகரிப்பு செலவு அதிகம் கொண்ட விமான எரிபொருளின் விலை இவ்விரண்டையும் விட குறைவாக உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி விமானத்திற்கு பயன்படுத்தும் ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் எனப்படும் விமான எரிபொருளின் விலையில் 11.3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்

பெட்ரோல் மற்றும் டீசல்

கடந்த மாத நிலவரப்படி விமான எரிபொருளின் விலை சாதரண பெட்ரோல் விட குறைவானதாக இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பின் காரணமாக டீசல் விலையை விடவும் குறைவானதாக விளங்குகிறது.

சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் 6 வருட சரிவை எட்டிய பின் மானியம் அல்லாத எல்.பி.ஜி சிலிண்டரின் விலை 103.56 ரூபாய் குறைந்து தற்போது 605 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவரை பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

விமான எரிபொருள்

விமான எரிபொருள்

நாட்டின் தலைநகர் டெல்லியில் விமான எரிபொருளின் விலை கிலோலீட்டர் 5909.9 ரூபாயாக குறைந்துள்ளது (11.27 சதவீதம் விலை குறைவு). மேலும் இந்த விலையில் எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 46,513 லீட்டர் விமான எரிபொருள் வழங்குவதகாவும் அறிவித்துள்ளது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

இன்றைய நிலவரப்படி விமான எரிபொருள் ஒரு லிட்டரின் விலை 46.51 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 58.91 ரூபாயாகவும், டீசல் விலை 51.52 ரூபாயாகவும் இருந்தது. கடந்த மாதம் பெட்ரோல் விலையை விட குறைவாக இருந்த விமான எரிபொருள் இன்று டீசல் விலையை விடவும் குறைவாக உள்ளது.

விமான கட்டணம்

விமான கட்டணம்

விமான போக்குவரத்து கட்டணத்தில் 40 சதவீதம் விமான எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது. இந்நிலையில் இந்த விலை குறைப்பின் மூலம் விமான கட்டணங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து எந்த ஒரு விமான நிறுவனங்களும் இதுவரை கட்டண குறைப்பு பற்றி அறிவிப்புகளை அறிவிக்கவில்லை.

கலால் வரி

கலால் வரி

கடந்த நவம்பர் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தொடர்ந்து 4 முறை கலால் வரி உயர்ந்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொட்ரோலுக்கு கலால் வரியாக 7.75 ரூபாயும், டீசலுக்கு 7.50 ரூபாயும் அதிகரித்துள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பொட்ரோல் மற்றும் டீசலும் சுமார் 9 முறை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை 14.69 ரூபாயும், டீசல் 10.71 ரூபாயும் குறைந்துள்ளது. சமையல் ஏரிவாயு விலையும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 7 முறை குறைக்கப்பட்டு தற்போது 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர் 605 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+