மீண்டும் 0.25% வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மத்திய அரசிற்கு கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் அதிகப்படியான நிதி கிடைத்துள்ளது, இத்தருணத்தில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்படாலம் என கருத்து நிலவுகிறது.

 

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 மாதங்களுக்கு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிட்டு ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. மேலும் இந்த புதிய வட்டி குறைப்பு பற்றிய அறிவிப்புகள் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கவுள்ள 2014-15ஆம் நிதியாண்டின் 6வது இரு மாத கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் தெரிய வரும்.

வட்டி குறைய வாய்ப்புகள் அதிகம்

வட்டி குறைய வாய்ப்புகள் அதிகம்

இதுக்குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், நாட்டின் சில்லறை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைவாக இருக்கும் நிலையில் அதனை நிலைநாட்ட ரிசர்வ் வங்கி, வட்டி வகிதத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர்.

கோல் இந்தியா

கோல் இந்தியா

மேலும் மத்திய அரசு தனது இருப்பில் இருந்த கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை பங்குச்சந்தையில் ஒ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசு 22,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இதுவும் ரிசர்வ் வங்கி விட்டி குறைப்பிற்கு முக்கிய காரணமாக அமையகிறது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

ஜனவரி 15ஆம் நாள் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக குறைக்கும் போதே அடுத்த வட்டி விகித குறைப்பு நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலையை பொருத்து தான் அமையும் என தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

டிசம்பர் மாதத்தின் இறுதியில் நாட்டின் சில்லறை பணவீக்கத்தின் அளவு 5 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 0.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடதக்கது.

பங்கு இருப்பு குறைப்பு

பங்கு இருப்பு குறைப்பு

மேலும் மத்திய அரசின் பங்கு இருப்பை குறைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என எதிர்பார்க்கிறது. அதுவரை மத்திய அரசு கோல் இந்தியா மற்றும் SAIL எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்றுள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI may cut rate further by 25 bps

The Reserve Bank of India (RBI) may cut its policy rate further by quarter of a percentage point this week to boost growth, as inflation remains under control and the fiscal situation appears better following a record Coal India (CIL) disinvestment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X