மும்பை: விமானத்திற்கு பயன்படுத்து விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் விலை 11.3 சதவீதம் குறைக்கப்பட்டதால் மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகள் உயர்வை கண்டது.
இன்றைய பங்குச்சந்தையில் முக்கிய துறை மற்றும் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 6.75 சதவீதம் உயர்ந்து இந்நிறுவன பங்குகள் 23.70 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டது.

அதேபோல் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 5.58 சதவீதம் உயர்ந்து, இந்நிறுவன பங்குகள் 543.50 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை எட்டியது.
ஏவியேஷன் டர்பைன் ஃபியூல் விலை 11.3 சதவீதம் குறைந்ததை தொடர்ந்து இந்தியாவில் டீசல் மற்றும் பொட்ரோல் விலையை விட விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது.
இதன் மூலம் விமான போக்குவரத்திற்கு 40 சதவீதம் உள்ளீடு செலவாக கருதப்படும் எரிபொருள் விலை குறைந்ததால் அடுத்த சில வாரங்களிள் விமான போக்குவரத்து கட்டணங்கள் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications