பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் தலைவர் அபித் அலி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
அபித் அலி டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 23 வருடம் பணியாற்றியுள்ளார், இவரை 2009ஆம் வருடம் இந்நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நியமனத்திற்கு பிறகு இப்பிரிவின் வருவாய் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 6.9 சதவீதத்தில் (2009ஆம் நிதியாண்டு) இருந்து 12 சதவீதமாக (2014ஆம் நிதியாண்டு) உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அபித் அலி தனது பணியை டிசிஎஸ் நிறுவனத்தில் முடித்துக்கொள்ளவும், நிறுவனத்தை விட்டு வெளியே செல்லவும் விரும்பினார். இதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்" என தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் டிசிஎஸ் நிறுவனம் ஜென்பேக்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது. இந்த 5 வருடத்தில் இவர் நிறுவனத்தின் வருவாய் இலக்கை 3 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications